பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

351 என்பது ஒப்பின் ஆகிய பெயர் ஆகையால் வேம்பு அவைத்தவன் அறிந்த கைப்பறிவினை நாவுணர்வினால் பிறன் உணரான் இவன் கைப்புச் சுவைத்தானெனக் கண்ணறிவினால் அறிவதன்றி, அது போல அச்சத்திற்கு எதுவாகிய ஒரு பொருளைக் கண்டு அஞ்சி ஒடி வருகின்றான் ஒருவனை மற்றொருவன் கண்டவழி இவன் வள்ளெயிற் றரிமா முதலாயின.கண்டு அஞ்சினான் என்றறி வதல்லது வள்ளெயிற் றரிமாவினைத் தான் காண்டல் வேண்டுவதன்று தான் கண்டானாயின் அதுவும் சுவை யெனவே படும். ஆகவே அஞ்சினானைக் கண்டு நகுதலும் கருணைசெய்தலும் கண்டோர்க்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலான், உய்ப்போன் செய்தது காண்போன் உய்த்த (உய்த்தறிந்த) அறிவின் பெற்றியால் (காண்போனிடம்) செல்லாதாகலின் இருவகை நிலம் என்பன சுவைப்பொருளும் சுவைத்தோனுமென இருநிலத்தும் நிகழுமென்பதே பொரு ளாதல் வேண்டும் என்பர். இவர் இவ்வாறு கூறுவ முடிவுமுறைத் திறனாய்வு ஆகும். i பேராசிரியர் முடிவு முறைத் திறனாய்வு வகையில் பல செய்திகளை எடுத்துக்கொண்டு, அவற்றைத் தர்க்க முறையில் ஆராய்ந்து, உண்மைப்பொருளை உணர்த்தி யுள்ளனர். அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம். தொல்காப்பியர் காலத்தில் இலக்கணம் எழுத்து சொல் பொருள் என மூன்று பகுப்பாகவே இருந்தது. அகப்பொருளும் புறப்பொருளும் செய்யுளியலாகிய யாப்பும் அணியின் பகுதியாகிய உவமையும் மெய்ப்பாடும் பிறவுமாகிய இவையெல்லாம் பொருளதிகாரத்தினுள்ளேயே கூறப்பட்டிருக்கின்றன. பிற்காலத்தே இறையனார் களவிய லும் நம்பி அகப்பொருளும் புறப்பொருளும் யாப்பருங் கலமும் யாப்பருங்கலக் காரிகையும் அணியியலும் தண்டி யலங்காரமும் தனித்தனியாக எழுந்தன. அவற்றுள் அணியியலும் தண்டியலங்காரமும் அணி பற்றியனவாகும். இவ்விரண்டுள் தண்டியலங்காரத்திற்கு முன் எழுந்தது அணியியல். இது உருவகத்தை முதலிலே