பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நிமிர் கிளவியாயும் அடியிகந்தும் ஆசிரியத்தாழிசை, வஞ்சித் தாழிசை வெண்டாழிசை கலித்தாழிசை என்றும், ஆசிரியத் துறை, வஞ்சித்துறை, வெண்டுறை, கலித்துறை என்றும், ஆசிரிய விருத்தம், வஞ்சி விருத்தம், வெளிவிருத்தம், கலிவிருத்தம் என்றும் பன்னிரண்டாக வரும் (தொல், செய்யுளியல் - 173, 174, 175 இளம்பூரணர் உரை) என்பர். இவற்றால் ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலிப்பா என்பன இயற்றமிழ்ப் பாடல்கள் என்றும், பண் முறையால் அமைந்த பண்ணத்தி என்னும் தமிழிசை துறை விருத்தங்கள் இசைத்தமிழ்ப் பாடல்கள் என்றும் நாம் வேறாகப் பிரித்து உணர்ந்து கொள்ள வேண்டும். பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள் தாழிசை துறை விருத்தங்களை இயற்றமிழ்ப் பாடலுக்கு இனமாகக் கொண்டு இலக்கணம் கூறியுள்ளார்கள். இவ்வாறு கூறும் வழக்கம் தொல்காப்பியர் காலத்திலே பெருமளவில் இல்லாமையினால் அவற்றை அவர் பண்ணத்தி என்கின்ற பெயராலே குறிப்பிட்டுச் சென்றார். பிற்காலப் படைப்பு இயற்றமிழ்ப் பாடல்களைக் காட்டிலும், இசைத்தமிழ்ப் பாட்டு ஒலிநயம் சிறந்ததாக இருத்தலால், பிற்காலப் புலவர்கள் அப்பாடல்களையே பெரிதும் பாடுவாராயினர். இதற்கு மாறுபட கல்லாடம் நளவெண்பா முதலிய இலக்கியங்கள் இயற்றமிழ்ப் பாடல்களாலேயே எழுந்துள்ளன. வஞ்சிப் பாவும், கலிப்பாவும் அருகிவிட்டன. இலக்கியம் தொல்காப்பியர் கூறிய எழுநிலத்தெழுந்த பாட்டும், உரையும், நூலும், வாய்மொழியும், பிசியும், அங்கதமும், முதுசொல்லும் ஆகிய செய்யுட்களும் பிற்காலத்தெழுந்த தாழிசை துறை விருத்த வகைகளாகிய இசைத்தமிழ்ப் பாடல்களும், நொண்டிச்சிந்து, கும்மிப்பாட்டு, பாம்பாட்டிச் சித்தர் பாட்டு, அம்மானை, கந்துகவரி, தோள்வீச்சாகிய திருத்தோனோக்கம் சாழல் உந்தியார், பள்ளிப்பாட்டு, மஞ்சரி முதலிய நாடகத் தமிழ்ப்பாடல்களும், இன்னும்