பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 விெருபதாம் நூற்றாண்டில் பலரால் வேறுபட்ட யாப்பு முறையில் இயற்றப்பட்டுள்ள பாட்டுகளும் ஆகிய இவை யெஸ்லாம் தமிழ்நாட்டு இலக்கியங்களாகும். தொல்காப்பியர் கூற்றில் காணப்படும் இலக்கியம் தொல்காப்பியர் பாட்டு முதலான ஏழனையும் செய்யுள் _று கூறினாலும் அவர் நூலுள் "புலன் நன்கு உணர்ந்த புலமையோர்" என்றும், "குறி அறிந்தோர்" என்றும், "யாப்பறி புலவர்" என்றும், "புலவர் ஆறு" என்றும், "உயர்மொழிப் புலவர்' என்றும், "தொன்மொழிப் புலவர்” என்றும், "ருணங்குமொழிப் புலவர்" என்றும், "நூல்நவில் புலவர்" என்றும், பல இடத்தில் கூறும் இப்பல தொடர் மொழி களைத் தொகுத்து நோக்கினால், புலன், குறி (இலக்கு: இலக்கியம்) வாய்மொழி, யாப்பு, புலவர் ஆறு, நூல், உய மொழி, தொன்மொழி, நுணங்கு மொழி என்பன வெல்லாம் இலக்கியத்தைக் குறிப்பதாகக் கருதவேண்டி யுள்ளது. ஆறாம் வேற்றுமை இன்ன இன்ன பொருளில் வரும் என்பதைக் கூறுமிடத்தே செய்யுட் கிழமையை உணர்த்த "தெரிந்து மொழிச் செய்தி" (தொல், சொல். 76) என்று கூறியுள்ளார். இத் தெரிந்து மொழியோடு வாய்மொழி, உயிர் மொழி, தொன்மொழி, நுணங்குமொழி என்பன வற்றையும் கூட்டி உணர்க. - புலனெறி வழக்கம் தொல்காப்பியம் அகத்திணையியலில், நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் என்றொரு நூற்பா உள்ளது. அது புலனெறி வழக்கம் இன்னதென்பதைக் கூறவந்தது. இங்கே புலன் என்னும் சொல்லினை நூல் என்று கொள்ளலாம். புலம் தொகுத் தோனே என்னும் பாயிரத்தையும், புலன் நன்கு உணர்ந்த புலமையோர் என்ற தொல்காப்பியர் கூற்றையும் காண்க அவ்வாறு கொண்டால் புலன்நெறி வழக்கம் என்பது நூல்நெறி வழக்கம் என்று பொருள்படும். தொல்காப்பியர்