பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 "புலவர் ஆறு" என்று குறிப்பதைக் கருதினால் புலன்நெறி வழக்கம் என்பது புலவராற்று வழக்கம் என்றும் பொருள் படும். இப்புலனெறி வழக்கம் சுவைபட வருவனவெல்லாம் தக்க இடத்திலே தக்க காலத்திலே வந்தனவாக நாட்டிக் கூறும் நாடக வழக்கத்தாலும், உலக மக்களது ஒழுக லாற்றோடு ஒத்துவரும் உலகியல் வழக்கத்தாலும் பாடப்படும் என்பர். இவ்வாறு பாடப்படுவது அகப்பொருள் புறப் பொருள் இரண்டிற்கும் ஒக்குமேனும் இந்நூற்பா அகத்திணையில் இருத்தலால், இங்கே புலனெறிவழக்கம் என்று கூறுவது அகத்திணைப் பொருளைக் குறிப்ப இந்நூற்பா விதியைப் பொதுவாகக் கருதினால், அகத்திணைப் புறத்தினைப் பொருள்களைப் புலவன் பாடுவதெல்லாம் புலனெறி வழக்கமே யாகும். அம்மை முதலான எட்டு தொல்காப்பியர் இலக்கியத்தைப் புலனெறி வழக்கம் என்ற பெயரால் பொதுவாகக் குறிப்பிட்டதோடன்றி, அம்மை முதலான எட்டு இலக்கியப் பகுப்பையும் சிறப்பாகக் கூறியுள்ளார். இவ்வெட்டின் இலக்கணங்களைக் கூர்ந்து நோக்கினால் இவற்றிற் பல ஒன்றன் அமைப்போடு ஒன்றன் அமைப்பு மாறுபட்டதாயிருக்கக் காண்கிறோம். அவ்வெட்டுள் ஒன்று அம்மை என்னும் இலக்கியமாகும். இது சிலவாய சொல்லால், மென்மையான சொல்லால் சீர்கள் அமைத்துச் சிறு வடிவத்திலே செய்த பாட்டாகும். இது சில அடிகளாலே வரும். இதற்குவைத்த பெயர் அம்மை என்பனவாகும். இவ்வமைப்பிற்கு மாறுபட்டது தோல் என்பதாகும். இது இழுமென் மொழியால் விழுமியது நுவலப்பட்டு பரந்த மொழியால் சீர்செய்து யாக்கப்பட்டு மிகுதியான அடிகளைப் பெற்று யானை போலியங்கும் பாட்டாகும். செய்யுளுக்குரிய சொற்களால் சீர் புனைந்து யாக்கப்படுவது அழகென்னும் இலக்கியமாகும். இவ்விலக்கிய அமைப்பிற்கு மாறுபட்டது சேரிமொழியால் செவ்விதிற் சொல்லப்பட்டுத் தேர்தல் வேண்டாத தெளிபொருளுடைய புலன் என்னும் இலக்கியமாகும். தொன்மை என்னும் இலக்கியம் பழைமைப் பண்பினையுடையது. இதன் அமைப்