பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353 என்னும் புறநானூற்றுப் பாடல் கோய்' என்னும் கள் வார்த்துண்ணும் பாத்திரத்தைத் தலைவனெருவனுக்கு உவமை கூறியது உயர்ந்ததில்லாமையாகக் கருதப்பட்டுக் குற்றமாகக் கருதப்படவேண்டும். சான்றோரால் செய்யப்பட்டுள்ள இப்பாட்டில் வந்துள்ள உவமை குற்றமன்றாகலின் மேல் காட்டிய (நாயகர்க்கு) என்னும் பாட்டில் வந்துள்ள உவமையும் குற்றமற்றதாகவே கொள்ளவேண்டும் எனின், இப்புறநானூற்றுப்பாட்டு பொன்மாலை, பூமாலை போலப் பொலிவு செய்தலின் இது குற்றமாகாது. மேற்பாட்டே குற்றமுடையதாம் எனின், இன்ன சொல்லும் இன்ன பொருளும் உடையன பொன்மாலை எனவும் பூமாலை எனவும் வரையறுத்துக் கூறலின்மையின் இந்த வகையி னாலும் அப்பாட்டைக் குற்றம் உடையது என்று கூறிவிட முடியாது.ஆனால் அந்த அணி இலக்கண நூல்கள் பொரு ளதிகாரத்துள்ள பொருட்பகுதிகளெல்லாம் செய்யுட்கு அணி செய்வனவே ஆகும். முதல் கரு உரி என்ற அப்பொருளெல்லாம் பாடலுள் பயின்றவையே யாகும். அக்காரணத்தால் அவற்றையெல்லாம் தொகுத்து அணியெனக் கூறாது, அவற்றுள் சிலவற்றை மட்டும் வாங்கிக் கொண்டு அணியெனக் கூறுதல் பொருந் தாது என்று மறுத்துக் கூறுகிறார் பேராசிரியர். இது முடிபு முறைத் திறனாய்விற்குரியது. ஒரு நூலினைத் திறனாய்வு செய்பவர் முன்னை அதன் மூல பாடத்தை நன்கு ஆராய்ந்து தக்க பாடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். பேராசிரியர் மெய்ப் பாட்டியலில் H. "புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே" என்னும் நூற்பாவிற்கு உரை எழுதும்பொழுது "புதுமையை ஆக்கத்துள் அடக்கி "முதுமை" யைப் பாடமாகவும் உரைப்ப" என்று ஒரு பாட வேறுபாட்டைக் காட்டுகிறார். இளம்பூரணரும் இவ்வாறு பாடம் கொள்ளவில்லை. வேறு யாரோ ஒருவர் " முதுமை பெருமை சிறுமை ஆக்கம்' என்று பாடங்கொண்டுள்ளார்.