பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 மேற்கண்ட பாடம் சரியன்று என்பதற்குப் பேராசிரியர் இரண்டு காரணம் காட்டுகிறார். ஒன்று அன்னதோர் வழக்கின்மையானும் என்பது இளம்பூரணர் முதலிய தொல் லாசிரியர் வழக்கு இல்லை என்பது இதற்குக் கருத்தாகும். மற்றொன்று புதுமை என்பது ஆக்கத்துள் அடங்குவ தாயின், ஆக்கம் போல ஒன்று ஒன்றாய்த் திரிதல் வேண்டும்; புதுமை அங்ங்னம் திரியாதது. இளம்பூரணரும் யாதொன் றாயினும் எவ்விடத்தினும் எக்காலத்தினும் தோன்றாததோர் பொருள் தோன்றுவது. அது கந்தருவர் அந்தரம் போதலைப் பார்ப்பது போன்றது என்பர். அதனால் புதுமை ஆக்கத்துள் அடங்காது இவ்விரண்டு காரணத்தால் முதுமை என்ற பாடம் தக்க பாடம் ஆகாது என்று மறுத்துள்ளார். இதற்கு இவற்றால் மூலபாடத்திறனாய்வு செய்யும் முறை நம் நாட்டில் முன்பே இருந்ததென்று அறிகின்றோம். பேராசிரியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை செய்துள்ளார். ஆனால் இப்பொழுது மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் என்னும் நான்கு இயல் கட்கு எழுதிய உரைமட்டும் கிடைக்கின்றது. இவர் இலக்கண நூல்களுக்கேயன்றி இலக்கியங்கட்கு உரை எழுதியிருக்க வேண்டும். நச்சினார்க்கினியர் உரைப்பாயிரப் பாட்டு பேராசிரியர் உரை எழுதாத விட்ட இருபது பாடல்களுக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதினார் என்று குறிக்கின்றது. அதனால் அவர் குறுந்தொகைக்கு உரை எழுதிய செய்தி புலனாகின்றது. இலக்கியங்கட்குச் சுவையாக உரை எழுதுவதில் இவர் மிக வல்லவர். "வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச் சொல் பொறாது இடம்சிறிதென்னும் ஊக்கம் துரப்ப ஒடுங்கா உள்ளத் தோம்ப ஈகை கடந்தரு தானைச் சேர லாதனை யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்