பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355 பொழுதென வரைதி புறங்கொடுத் திருத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும் பகல்விளங் கலையால் பல்கதிர் விரித்தே" (புறநானூறு 8) என்னும் இப்பாட்டு சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடிய பாட்டாகும். இப்பாட்டுப் புறநானூற்றில் "பகல் விளங்குதியால்" என்னும் பாடத்துடன் ஒதப்பட்டுப் புறநானூற்று உரையாசிரியரால் சூரிய மண்டிலத்தை நோக்கிக் கூறியதாக உரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பேராசிரிய ரால் "பகல்விளங் கலையால்" என்று பாடங் கொள்ளப் பட்டுத் தண்கதிர் மண்டிலத்தை நோக்கிக் கூறுவதாக உரை கூறப்பெறுகிறது. இலக்கியங்களில் எவ்வாறு ஈடுபட்டு இலக்கியச் சுவையை வெளிப்படுத்துகிறார் என்னும் செய்தி இப் பாட்டிற்கு இவர் உரை கொள்ளும் முறையால் அறிந்து கொள்ளலாம். இப்பாட்டினைப் பேராசிரியர் தொல் - உவமவியலில் "வேறுபட வந்த உவமத் தோற்றத்தைக்" கூறும் நூற்பா விலும், "ஒரீசிக் கூறுலும் "மரீசிய பண்பே" என்னும் நூற்பா விலும் எடுத்தாளுகின்றார். இப்பாடல் புறத்திணைப் பாடலாகும். பாடாண் திணையுள் இயல்பினைக் கூறுகின்ற இயன்மொழி வாழ்த் தாகும். திங்களாகிய தெய்வத்துடன் ஒப்பிட்டுக் கூறுவதால் பூவைநிலை என்றும் புகல்வர். இயன்மொழி வாழ்த்துத் துறையே சிறப்புடைத்தே. பேராசிரியர் உரைப்பது உவமையாகிய திங்களை வீங்கு செலன் மண்டிலமே! நீ எங்கள் சேரலாதனை யாங்கனம் ஒத்தியோ? என வினாவிக் குறிப்பால் (குறிப்பு செய்யுளுக்கு ஓர் உறுப்பு) நீ ஒவ்வாய் என்னும் கருத்தைப் பெற வைக்கிறார். இவ்வுவமை இப் பொருளுக்கு உவமையாகாது என்று கூறுதலால் இது ஒரீஇக்கூறுதல் என்ற வகையின் பாற்படும்.