பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 அடுத்து இப்பாட்டு வேறுபட வந்த உவமத் தோற்ற மும் ஆகும் அவை பலவகையாக வரும் என்று வேறு படவந்த" (32) என்னும் நூற்பா வுரையில் அவர் கூறி யுள்ளார்.அவற்றுள் ஒன்று உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுவது. எனவே இப்பாடலை உவமைக்கு மாறுபடக் கூறுவது என்றும் பொருட்கு மாறுபடக் கூறுவது என்றும் இரண் டாகப் பிரித்துக் கொள்ளவேண்டும் இங்கே உவமை தண்கதிர் மண்டிலமாகிய திங்கள். பொருள் சேரலாதன். முதற்கண் பொருளுக்கு ஒதிய அடையை மறுத்து திங்களாகிய உவமைக்கு மாறுபடக் கூறுகிறான். எவ்வா றெனின்? வையங்காவலர் வழிமொழிந் தொழுக என்பது தொடங்கி, ஒம்பா ஈகை என்பது வரையிலும் மறுத்துக் கொள்ள வைத்துள்ளான். (1) வையம் காவலர் எல்லோரும் தம் தன்மையென ஒன்றின்றி (தம்தன்மை இழிந்து) (சேரலாதன்) மொழிந்ததையே மொழிந்து ஒழுகுமாறு அவன் உள்ளான். எனவே எல்லா அரசரையும் சேரன் தன்னகப்படுத்தி அவர்கட்கெல்லாம் தலைமையுடன் விளங்குகின்றான் என்றனர். ஆனால், உவமமாகிய திங்களோவெனின், தன்னை யொழிந்த எல்லாக்கோள்களும் ஒளிகுறையாமல் தன்றன்மை யோடு இயங்க அவற்றுடன் தானும் இயங்கும் என்றது ஏனைய கோள்களெல்லாம் வழிமொழிந்து ஒழுகும் நிலையில் திங்கள் இல்லை என்பதை உணர்த்துகிறது. (2) போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாதவன் சேரலாதன் எனவே இன்ப நுகர்வை விரும்பிப் பழிபட வொழுகி உலகமக்களால் பழிக்கப்படாதவன் என்பதாயிற்று, திங்களோவெனின், பல மகளிரொடு இன்பம் நுகர்ந்து அவர்களுடன் ஒத்த அன்பால் ஒழுகாது உரோகணிபால் கழிகாமத்தனாய் இருப்ப அதன் காரணமாக எழுந்த பூசலால் எல்லோரும் பழித்துப் பேசுமாறு உள்ளான். எனவே இதனாலும் சேரலாதனைத் திங்கள் ஒவ்வாதாயிற்று.