பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357 (3) இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப' என்றது சேரன் தனக்குரிய சேரனாடு சிறிது என்னும் ஊக்கம் துரப்பத் தன் நாட்டை விரிவுபடுத்திக் கொள்பவன் சேரலாதன். திங்களாகிய நீயோ எஞ்ஞான்றும் உன் எல்லைக் கண்ணேயே இயங்குகிறாய். அதனாலும் சேரலாதனை ஒவ்வாய் என்றது. (4) சேரலாதன் ஒடுங்கா உள்ளத்தினையுடையான். திங்களாகிய நீயோ நாடொறும் தேய்ந்து சூரியனிடத்திலே ஒடுங்குகிறாய். இதனாலும் நீ அவனை ஒவ்வாய் என்றது. (5) சேரலாதன் ஒம்பா ஈகையை உடையன். திங்க ளாகிய நீயோ நாடொறும் ஒவ்வொரு கலையாக வளர்ந்து உயிர்கட்கு இன்பம் தருகிறாய் இதனாலும் அவனை ஒவ்வாய் என்றது. II இனி உவமைக்கு ஒதிய அடையை மறுத்துச் சேரலாதனாகிய பொருட்கு மாறுபடக் கூறுகிறான் (1) திங்கள் (விலங்குசெலன் மண்டிலம்) திங்களே! நீ ஒதுங்கிச் செல்லும் செலவினை உடையவனாயிருக்கின்றாய். சேரலாதனோவெனின், விலங்கிச் செல்லான், தலைமை யானவர் நடக்கும் விலங்காநடையை யுடையவன் என்றனர். (2) பொழுதென வரைதி; திங்களே! நீ நாடொறும் நாழிகை வேறுபட்டுத் தோன்றுகிறாய். சேரலாதன் எப்பொழுதும் விளங்குவான். (3) புறங்கொடுத்து இறத்தி திங்களே! நீ தோற்றோர் போல் ஒளிமழுங்கிச் செல்கின்றாய். சேரலாதன் ஒளிபெற விளங்கிப் பிறர் தோற்றோடக் காய்வான். (4) மாறிவருதி; திங்களே! திங்கள்தோறும் மாற்றம் அடைந்து பிறக்கின்றாய்; சேரலாதன் இவன் என்றும் மாறா நிலை பெற்றவன். 1. " நாடுகண் அகற்றிய உதியஞ் சேரலைப் பாடிச் சென்று புலவரைப் போல"