பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 (5) மலைமறைந்து ஒளித்தி; திங்களே! அத்தமனமலை சார்ந்த வழித்தோன்றாய்; சேரலாதன் மேற்குமலைச் செறிவில் சிறந்து விளங்குகின்றான். (6) அகலிடு விசும்பினாலும் திங்களே! நீ வானத்தே விளங்குவாய்: சேரலாதன் நிலவுலகத்தே வாழ்பவன். (7) பகல் விளங்கலை; திங்கள்! நீ பகற்காலத்தே விளங்காய் சேரலாதன் இருபொழுதும் விளங்குவன் என்னும் இவற்றாலும் ஒவ்வாய் என்றது. எனவே முற்பகுதியில், திங்களாகிய நீ (உவமை) 1. வழிமொழிந் தொழுகப் பெறாய் 2. போகம் வேண்டிப் பொதுச் சொல் பெறுவை 3. இடஞ்சிறிதென்னும் ஊக்கம் இல்லாய் 4. ஒடுங்கிய வுள்ளத்தை 5. ஓம்பவும் ஈகையினை மேற்காட்டிய இவையெல்லாம் பொருளுக்கு ஒதிய அடையை மறுத்து உவமைக்குக் கொள்ளப் பெற்ற அடை யாகும். பிற்பகுதியில் சேரலாதன் என்னும் அரசன், (1) விலங்குசெலல் இல்லாதவன் (2) பொழுதென வரையாதவன் (3) புறங்கொடுத்து இறக்காதவன் (4) மலைமறைந்து ஒளிக்காதவன் (5) மாறி வராதவன் (6) அகன்ற நிலப்பரப்பில் விளங்குபவன் (7) பகல்இரவு எப்பொழுதும் விளங்குபவன் மேற்காட்டிய அடையை