பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 விளக்கங்கள் குறிப்பிடப்பட வேண்டும். அக்குறிப்பு அவற்றைச் சுவைப்பதற்கு ஏதுவாயிருக்கும். இத்தகைய குறிப்பினைப் பேராசிரியர் சிலபாட்டிற்குத் தந்துள்ளார். அவர் முத்தொள்ளாயிரத்தில், ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன் - நாணிப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு என்னும் பாடலைக் குறிப்பிட்டு, "இப்பாட்டில் மெய்ப்பாடு எட்டில் இளிவரல் என்னும் மெய்ப்பாடு பற்றி உவமம் வந்துள்ளது. என்னை? தலைமகன் மாட்டு இன்ப விளையாட்டெய்துவார் பலரையுங்கண்டு, நெஞ்சு முற்றிலும் புன்கண் எய்தித் தனிநின்று தலைவனிடம் புகப்பெறாது இளி வந்தமையின் அப்ப்ெயர்த்தாயிற்று" என்பர். இவ் விளக்கத்தைப் படித்த நாம், தலைவி தலைமகனிடத்திலே இன்பம் துய்க்க விரும்பிச் சென்றாள் என்பதும், அப் பொழுது தலைமகன் பல பெண்களுடன் இன்ப விளை யாட்டை நிகழ்த்திக் கொண்டிருந்தான் என்பதும், அதனைக் கண்ட தலைவி மனம் முற்றிலும் புண்ணடைந்து தன் வீட்டிற்குள் வந்து கதவடைத்துப் படுத்துக் கொண்டாள் என்பதும், அவள் உடம்பு இங்கே தனித்துப் படுத்திருந்தாலும் உள்ளம் மட்டும் தலைவனிடத்தே ஒடுவதும் அவனுடைய தகாத ஒழுக்கத்தைக் கருதித் திரும்புவதுமாகத் திரிந்தன. நெஞ்சு புகுந்தென்பதும், அந்நெஞ்சு தலைவனிடம் வருவதும் போவதும் எதனைப் போலிருந்தெனின்? செல்வம் புலன் புணர்வு விளையாட்டால் வேருவகை படைத்திருக்கும் பெருஞ்செல்வர் மனையில், மூப்பு பிணி வருத்தம் மென்மை என்னும் இவற்றினைப் பெற்றுஇளிவரவு பெற்றவனொருவன் இளிவரவை போக்கிக் கொள்ளக் கருதி அம்மனையில் உள்ளே நுழைவதும், அம்மனையில் இருப்பவரால் மதிக்கப் பெறாமல், வெளிவருவதும், செய்தலைப் போன்றுள்ளது என்பதும் ஆகிய இவையெல்லாம் புலனாகின்றது.