பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361 பாட்டிற்கு உறுப்பு யாப்பருங்கலக் காரிகை எழுத்து, அசை, சீர்பந்தம், அடி, தொடை, பா, இனம் கூறுவன் என்று தொடங்கி உறுப் பியலில் எழுத்து, அசை, சீர் பந்தம் அடி தொடை என்னும் ஆறினையும் கூறுகின்றது. உறுப்பியல் என்ற தலைப்பில் இந்த ஆறும் ஒதப்பெற்றுள்ளமையால் மேற்கூறிய ஆறினை யும் நாம் உறுப்பென்றுதான் கருதிக் கொள்ள வேண்டும். பாவினையும் இனத்தினையும் செய்யுளியல் என்ற தலைப்பில் ஒதுவதால் அவற்றை முதல் என்று கருதிக் கொள்ள வேண்டும். முதல் சினை என்ற பாகுபாட்டில் எழுத்து முதலான ஆறினையும் சினையாகவும் பாவும் இனமுமாகிய செய்யுளை முதலாகவும் கொள்ள வேண்டும். யாப்பருங்கலம் என்னும் நூலும் காரிகை போல உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் என மூன்று இயலை வகுத்துக் கொண்டு உறுப்பியலில் எழுத்தோத்து, அசை யோத்து, சீர் ஒத்து, தளை ஒத்து அடியோத்து, தொடையோத்து, என ஆறு ஒத்தினை வகுத்துக் கொண்டு எழுத்து முதலான ஆறினையும் கூறுகின்றது. எழுத்து முதலான ஆறும் உறுப்பியல் என்ற தலைப்பின் கீழ் ஒதப் பெறுவதால் இந்த ஆறினையும் உறுப்பென்னும் சினையாகவே கொள்ள வேண்டும். துரக்காகிய பாவும் இனமும் முதலாகும். ஆனால் தொல்காப்பியத்தில் உள்ள செய்யுளியலானது மாத்திரை எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவியல், திணை, கைகோள், கூற்று, கேட்போர் களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம் என்னும் இருபத்தாறுடன் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன் என்று எட்டினையும் சேர்த்து முப்பத் தாறினையும் செய்யுள் உறுப்பென்றே தொல்காப்பியர் கூறியுள்ளார். 'பொருந்தக் கூறிய தொகைஇ நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே என்பது அந்த நூற்பாப் பகுதியாகும்.