பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 இந்நூற்பா உரையில் பேராசிரியர் மற்றுச் செய்யுள் உறுப்பு ஈண்டோதினார். செய்யுள் யாண்டு ஒதுபவெனின்? அறியாது கடாயினாய் உறுப்பென்பன உறுப்புடைப் பொரு ளின் (முதலின்) வேறெனப்படா. பொருள் எனப் படுவன உறுப்பே, அவற்றது ஈட்டத்தினைமுதலென வழங்கப் படுமாகலான் உறுப்பினையே சொல்லி யொழிந்தார். முதற் பொருளதிலக்கணமென உறுப்பிலக்கிணத்தினையே வேறு படுத்துக் கூறலாவதின்மையானும், உறுப்புரைப்பவே அவ்வுறுப்புடைய பொருள் வழக்கியலாற் பெறலாமாக லானும் என்பர். இவ்வாறு எழுதிய பேராசிரியர் செய்யுளியல் முதற் சூத்திரத்தின் இறுதியில் "இவற்றை உயிருடையதன் உறுப்புப் போலக் கொள்ளின் உயிர்வேறு கூறுதல் வேண்டுவதாம். அவ்வாறு கூறாமையால் கலவை உறுப்புப் போலக் கொள்க என்பர். நச்சினார்க்கினியரும் பேராசிரியரைப் பின்பற்றி, "இவற்றை உயிரில்லாத கலவை உறுப்புப் போல் கொள்க" என்பர். மேற்கூறிய பேராசிரியர் நச்சினார்க்கினியர் என்னும் இருவர்தம் கூற்றிலிருந்து பாட்டிற்கு உயிர் ஒன்று கொள்ள வேண்டுவதில்லை என்பது தெரிகின்றது. செய்யுளை மக்கள் உடம்புபோல் கருதிவிட்டால் உடம்பு பலவகைத் தாதுவினால் செய்யப்பட்டது.அதுபோல் செய்யுளும் பலவகைச் சொல்லால் செய்யப்படும்.அவ்வுடம்பு உயிர்க்கு இடமாயிருத்தல் போலச் செய்யுளும் பொருட்கு இடமாயிருக்கும் என்று கொள்ளலாம்.இவ்வாறு கொள்வது செய்யுள் உறுப்பினை உயிருடைய தன் உறுப்புப் போலக் கொள்வதாம். மேற்கூறியவாறு கொள்ளாமல்,பலவகை மலரும் நாரும் சேர்ந்து மாலையாயினாற் போல பலவகை உறுப்புகள் சேர்ந்து செய்யுளாயிற்று என்று கொள்ளின் இது கலவை உறுப்புப் போலச் செய்யுள் உறுப்புகளைக் கொள்ளும் நெறியாகும். இருவகை பாட்டின் உறுப்புக்களை உயிருடைய தன் உறுப்புப் போலக் கொள்ளும் முறையும் உண்டு. நன்னூல்,