பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363 பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் என்று கூறுவதையும், வீரசோழியம் உரைஉட லாக உயிர்பொரு ளாக உரைத்தவண்ணம் நிரைநிற மாநடை யேசெலவா நின்ற செய்யுட்களாம் தரைமலி மானுடர் என்று கூறுவதையும் கருதினால் இவ்விரண்டு நூலாரும் கருதுவது செய்யுளை உயிருடையதன் உறுப்புப் போலக் கொள்ளுகின்றனர் என்பது புலனாகின்றது. சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்றும் நல்லிருந் தீந்தாது நாறுதலால் - மல்லிகையின் வண்டார் கமழ்தாம மன்றே மலையாத தண்டாரான் கூடல் தமிழ் என்னும் இப்பாட்டு தமிழ்ப்பாடலின் உறுப்புக்களை உயிரில்லாத கலவை உறுப்புப் போலக் கொள்கின்றது என்பது புலனாகும். தொல்காப்பியர் உறுப்பென்று கூறியவற்றில் பா என்பது ஒன்றாகும். அவ்வுறுப்பைப் பற்றி அவர் அங்கு பேசுவதெல்லாம் பா எத்தனை? அவை எப்பொருள் மேல் வரும்? வெண்பா முதலான ஒவ்வொரு பாவும் அவ்விலக்கணத்தனவாய் வரும்? என்பவையே. இங்கே பேசப்படுவதெல்லாம் பாவும் இனமும் எனப்பகுத்துக் கொண்டு யாப்பருங்கலம் முதலிய நூல்கள் செய்யுளியலிலே கூறுகின்றது. எனவே செய்யுளியலில் பாச்செய்யுளைப் பேசுமிடம் பா என்னும் தலைப்பில் கூறப்பெறுவன அத்தனையும் ஆம். கருத்து (மாறுபாடு தொல்காப்பியர் பா என்பதை உறுப்பு என்று ஒது கின்றார். யாப்பருங்கலம் யாப்பருங்கலக் காரிகை முதலியவற்றின் ஆசிரியரெல்லாம் பா என்பது எழுத்து அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் உறுப்புக்களால் ஆன முதல் என்று கருதுகிறார். ") и