பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 அது போலப் பாட்டினை உயிருடையதன் உறுப்புப் போலக் கொண்டு பாட்டிற்கு உயிர் இன்னது என்று கூறுபவருள்ளும் பொருளே உயிர் என்பாரும், வைதர்ப்ப நெறி கெளட நெறி என்று வகுத்துக் கொண்டு பாட்டினைக் கூறும் முறையாகிய செறிவு முதலான பத்தும் உயிர் என்பாரும் என இருவகையினராக உள்ளனர். மேல்நாட்டுத் திறனாய்வாளர் பாட்டினை உயிருடை யதன் உறுப்புப் போலக் கொண்டு பொருளைப் பாட்டினால் புலவன் சொல்லுகின்ற முறையினையே உயிர் என்கின்றனர். இவர்களுக்கெல்லாம் மாறாகப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பாட்டை உயிரில் பொருள் போலக் கொண்டு பாட்டின் உறுப்பை உயிரில்லாத பொருளின் உறுப்பாகிய கலவை உறுப்புப் போலக் கொள்க என்பர்.