பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தொல்காப்பியப் பொருளதிகாரம் முதல் ஐந்து இயல்கள் - ஒர் ஆய்வு தோற்றுவாய் தமிழர்தம் தலைமைக்கும் தகைமைக்கும் தக்கதோர் எடுத்துக் காட்டாகத் திகழ்வது தொல்காப்பியன் தந்த தொல்காப்பியம், இது எழுத்து, சொல், பொருள் என்றும் மூன்று அதிகாரங்களை உடையது. எழுத்துக்கு இலக்கணம் இயம்புவது எழுத்ததிகாரம் சொல்லுக்கு இலக்கணம் சொல்வது சொல்லதிகாரம் பொருளுக்கு இலக்கணம் மொழி வது பொருளதிகாரம். இம்முறை வைப்பினை ஆராய்கின்ற மு. இராகவய்யங்கார் தம் தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, என்ற நூலில், எழுத்துஞ் சொல்லும் ஆராய்ந்து அச்சொற்றொடர் கருவியாகப் பொருளுணர்ச்சி பெற வேண்டுமாதலால் அம்முறையில் வைத்துத் தொல்காப்பியம் கூறுவதாயிற்று' என்று கூறுகின்றார். பொருளதிகாரத்தின் இன்றியமை யாமையை இறையனார் களவியல் உரைகாரரும் 'எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் ki பொருட்டன்றே: பொருளதிகாரம்பெறெஎம் எனில் இவை பெற்றும் பெற்றிலேம்" என்று மொழிகின்ற்ார். இப்பற்றி வாய்ந்த பொருளதிகாரம் மக்கள்தம் ஒழுக்க நெறியை அகவொழுக்கம், புறவொழுக்கம் என்ற இரண் டாகப் பிரித்துக் கொண்டு அவற்றிற்கு முறையே அகத்திணை, புறத்திணை என்று பெயர் வைத்து அவற்றை முறைப்படுத்திக் கூறுகிறது. அகவொழுக்கத்தை அகத்திணையியல், பொரு ளியல் என்ற பொதுவியல்களாகவும் களவியல், கற்பியல் என்ற சிறப்பியல்புகளாகவும் தொல்காப்பியனார் விரித்து