பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 ஒதினார்.புறவொழுக்கத்தைப் புறத்திணையியல் என்ற ஓரியலாலேயே கூறுகின்றார்.இரண்டொழுக்கத்திற்கும் வேண்டும் பொதுச்செயதிகளை மெய்ப்பாட்டியல் உவமையியல், செய்யுளியல், மரபியல் என்னும் நான்கு இயல்களாலேயே கூறுகின்றார். இவற்றையெல்லாம் கருதின் தொல்காப்பியனார் அகவொழுக்கத்திற்கே முதன்மையும் சிறப்பும் தருகின்றார் என்பது புலனாகிறது. வெளிநாட்டுப் பழைய இலக்கியங்களில் புறவொழுக்கமாகிய வீரநிலையே முதன்மையும் சிறப்பும் வாய்ந்ததாக இருந்தது என்ற உண்மையைத் தொல்காப்பியனார் புலப்படுத்துகின்றார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் இயல்களை 'உயர்திணை அஃறிணை என்றிவ் வுலகை மயர்வில் அறிவின் வளத்தால் செயிர்அற நன்று பிரித்ததொடு நல்ல அகம்புறம் என்னும் இருகூறு கண்டார் யார்? 'களவுநெறி கற்புநெறி கட்டுரைத்துள் ளகத்தே உளவாம் மெய்ப்பா டுவமைஓர்வித் - தளவையிலாச் செய்யுளியல் நன்மரபும் தேற்றினர்தொல் காப்பியனார் வையக மெங்கும் இல்லா வகை' என்ற வெண்பாக்களும் வரிசைப்படுத்துகின்றன. தொல் காப்பியப் பொருளதிகாரத்தின் இவ்வொன்பது இயல்களில் முதல் ஐந்து இயல்கள் பற்றி ஆய்வதே கட்டுரையின் நோக்கம். #. பொருளதிகார உரைகள் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு உரை கண்டவர்கள் அறுவர். அவர்கள் வருமாறு: 1. இளம்பூரணர் 2. நச்சர் 3. பேராசிரியர் 4. சோமசுந்தர பாரதியார் 5. புலவர் குழந்தை 6. மு. அருணாசலம் பிள்ளை