பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

369 பெயர்த்தாயிற்று. நாண்மீனின் பெயர் நாளிற்கும் பெயராயினாற் போல்வதோர் ஆகுபெயர். பொருளாவன ஆறும் பொருளின்பமும் அவற்றது நிலையின்மையும், அவற்றின் நீங்கிய வீடுபேறுமாம் பொருளெனப் பொதுப்படக் கூறவே அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும் பூதமும் அவற்றின் பகுதி யாகிய இயங்குதினையும், நிலத்தினையும் பிறவும் பொருளாம்' என்பது நச்சரின் உரை. "எழுத்துஞ் சொல்லும் செய்யுளுக்கு இன்றியமையாத உறுப்புக்கள் ஆதலின் அவற்றை முறையே முன்னிரண்டு பகுதிகளாக வகுத்துக் கூறின. தொல்காப்பியர் புலவர்க்குரிய பொருட்பகுதியை மூன்று படலமாக வகுத்தார். மக்கள் கருத்துக்களை விளங்க வெளிப் படுத்துங் கருவியனைத்தும் செய்யுளெனப்படும். செவ்விதாய வளப்பாடு அதாவது உளத்துறுங் கருத்தைக் கேட்போருளத்துறக் கூறுதற்குரிய சொற் றொடர்கள் எல்லாம் செய்யுளாகும். பாட்டே செய்யுளென்பது பிற்காலப் பிழை வழக்கு. உரை, பாட்டு, நூல், பிசி, குறிப்பு மொழி, மறைமொழி, பழமொழி எனப் பலவகையாலும் பலவேறுருவிற் குள்ளே நின்று பொருள்பயப்பன யாவும் செய்யுளே யாம். செய்யுளெல்லாம் பொருள் பற்றியனவேமாக லானும், பொருள் ஒன்றே மக்கள் அப்பொருள் பற்றியும், அப்பொருள் உரைக்குங்கருவியாகும் செய்யுள் பற்றியும், அவையிற்றுக் குறுப்பும், துண்ையுமாவன் பற்றியும் கூறுவனவற்றின் தொகுதி தொல்காப்பியரின் பொருட்படலமாகும்' என்பது நாவலர் சோமசுந்தர பாரதியாரின் உரைவிளக்கம் 'நிறுத்த முறையினானே பொருளினது இலக்கணம் உணர்த்தினமையின் இது பொருளதிகாரம் என்னும் பெயர்த்தாயிற்று. இது புலியின் வடிவம் பொறித்த கொடியைப் புலிக்கொடி என்றாற் போல குனியாகு பெயர்.