பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 'பொருளாவன அகப்பொருளும் புறப்பொருளும் அவற்றின் பகுதியாகிய முதல் கரு உரிப் பொருள்களுமாம். அகம், புறம் என்பனவே அறம், பொருள், இன்பம் என வேறு வகையான் வழங்கப் படுதலின் அவையும் இவையேயாம். இன்பம் அகத் திலும் அறமும் பொருளும் புறத்திலும் அடங்கும் இன்பமும் பொருளும் அறமும் என்றாங்கு (கள1) என ஆசிரியர் கூறுதல் காண்க. 'இனி இயற்கிைப் பொருள் செயற்கைப் பொருள், காட்சிப் பொருள், கருத்துப் பொருள், உயர்திணைப் பொருள், அஃறிணைப் பொருள், பொதுப்பொருள், சிறப்புப் பொருள் முதலிய பொருட்கூறுபாடுக ளெல்லாம் இவ்விரண்டனுள் அடங்குமென்க.எல்லாப் பொருளும் அடங்கும் என்பது புலவர் குழந்தை கூறும் விளக்கம். பொருளதிகாரம் கிளத்தும் பொருள் என்பது இன்னது என்பது குறித்து விளக்குவதில் ஒவ்வொரு உரையாசிரியரும் வேறுபடுகின்றனர். குழந்தை தரும் விளக்கம் இளம்பூரணர் உரையையும், நச்சினார்க்கினியரின் உரையையும் உள்ளடக்கி நிற்கிறது. ஆழ்ந்து நோக்கும்போது குழந்தை தரும் அகம் புறம் என்ற விளக்கத்தை இளம்பூரணரே கூறிப்போந்தமை புலனாகிறது. 'முதல் கரு உரிப்பொருளென்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை' என்ற அகத்திணையியல் நூற்பா உரையில், 'இச்சூத்திரத்துட் பாடலுட் பயின்ற பொருள் மூன்று என ஒதி அவற்றின் உரிப்பொருள் என ஒன்றை ஒதினமையால் புறப் பொருளும் உரிப்பொருளாகியவாறு கண்டு கொள்க’ என உரைப்பதால் இதனைத் தெளியலாம். சோமசுந்தர பாரதியாரின் பொருளதிகார விளக்கத்தில் பொருள் என்பது இன்னது என்ற விளக்கத்தையே காண முடியவில்லை.