பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

371 ஒன்பதில் ஐந்து முதல் ஐந்து இயல்களில் நான்கு இயல்கள் மட்டுமே அகம் கிளத்துவன. ஏனைய ஒரு இயல் புறம் புகல்வது. அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்ற அகம் கூறும் நான்கு இயல்களும் முதலும் முடிவும் அகவொழுக்கத்திற்கு உரிய பொதுவான இலக்கணங்களை உணர்த்தி நிற்கின்றன. களவியல் தலைமகன், தலைமகள் இருவர்தம் களவு வாழ்க்கையின் விளக்கம், களவுவழிப்பட்ட தலைமகன், தலைமகள் இருவரும் ஊரறிய, நாடறிய, வதுவையயர்ந்து இல்லறம் நடாத்தும் பாங்கினைக் கற்பியல் விரிக்கின்றது. புறத்திணையியல் போர் பற்றி விளக்குவது. முதலில் அகவொழுக்கத்தின் விளக்கங்களான அகத்திணை யியல், களவியல், கற்பியல், பொருளியல் இவற்றை முன்னர்க் கண்டு, பின் புறம் புகலும் புறத்திணையியல் பற்றிக் காண்போம். அகத்திணையியல் அகத்திணையியல் காதல் ஒழுக்கத்திற்குப் பொது விலக்கணம் கூறுவதாகும். 'ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்திற்குப் பின்னர் அவ்விருவரும் தத்தமக்குப் புலனாகா இவ்வாறிருந்தெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத் துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருள், ஆதலின் அதனை அகம் என்றார். என நச்சினார்க்கினியர் அகம் என்பது இன்னது என விளக்குவர். 'அகமாவது காதலர் உள்ளக்கிடக்கையும் அவர் காதல் கதிர்த்து வினைப்பட்டு அன்னோர் மனை வாழ்க்கையிற் றொடர் புறுவதுமாகும்' என சோமசுந்தர பாரதியார் அகத்திற்கு விளக்கம் தருகின்றார். இனி இவ்வகத்திணையியல் கூறும் பொதுச் செய்திகளைக் காண்போம்.