பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379 'கலந்த பொழுதும் என்ற நூற்பாவிற்கு, கலந்த பொழுது என்பது தலைவனைக் கண்ணுற்றவழி மனநிகழ்ச்சி யுளதாங் காலம்: அக்காட்சி பின்னர்க் குறிப்பறியுந் துணையும் நிகழும் நிகழ்ச்சி. காட்சியாவது தலைவியை எதிர்ப்படுதல். குறிப்பறிந்த பின்னர்ப் புனருந் துணையும் நிகழும் முன்னிலையாக்கல் முதலாயின புணர்தல் நிமித்தம். இவை இந்நிரலேயன்றிப் பொதுப்பட நிற்றலின் வேறு ஒதப்பட்டன. அன்ன என்பது (இவையும்) ஒர் இடத்து நிகழும் உரிப் பொருள் என்றவாறு. ஓரிடமாவது கைக்கிளை என உரை வகுப்பர். இவற்றை நோக்கும்போது தொல் காப்பியனார் எழுதினைக்கு உரிய உரிப்பொருள்களை இம்மூன்று நூற்பாக்களில் தெரிவிக்கின்றார் என்பது இளம் பூரணர் கருத்து என்பது தெளிவாகிறது. கருப்பொருள் ஐந்திணைக்குரிய கருப்பொருள்கள் இன்னின்ன என்பதை, 'தெய்வம், உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ. அவ்வகை பிறவும் கருவென மொழிப' என்ற நூற்பாவில் நவில்கின்றார். இந்நூற்பாவில் இடம் பெறும் முதல் கருப்பொருளான தெய்வத்தின் பெயர்களை. "மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்ற நூற்பாவில் மொழிகின்றார். இனி கருப்பொருள்கள் கூறும் நூற்பாவில் விடுத்த கருப்பொருள்களில் பூவை, 'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயந்த வாகும்'