பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 உரிப்பொருள்கள் ஐந்து திணைக்குரிய உரிப்பொருள்கள் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்றிவையும், இவற்றின் நிமித்தங்களும் ஆம் என்பதை, 'புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே’ என்ற நூற்பாவினால் தெளியலாம். இவையேயல்லாமல் மேலும் சில உரிப்பொருள்கள் உண்டு என்பதை, 'கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவண் இரங்கலும் உண்டென மொழிப ஓரிடத்தான 'கலந்த பொழுதும் காட்சியும் அன்ன என்ற நூற்பாக்களுக்கு உரைவகுக்கும் இளம்பூரணர் உரையால் உணரலாம். இவற்றில் கொண்டுதலைக் கழிதல்' என்ற நூற்பாவிற்கு 'ஓரிடத்து என்றமையான் மேற்சொல்லப்பட்ட ஐவகை உரிப்பொருளும் போல் எல்லாத் திணைக்கும் பொது வாகி வருதலின்றிக் கொண்டுதலைக் கழிதல் பாலைக் கண்ணும் பிரிந்தவன் இரங்கல் பெருந்திணைக் கண்ணும் வரும் என்று கொள்க. கொண்டுதலைக் கழிதலாவது உட்ன்கொண்டு பெயர்தல். அது நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமையானும், உடன்கொண்டு பெயர்தலின் பிரிதலின் அடங்காமை யானும் வேறு ஒதப்பட்டது. பிரிந்தவன் இரங்கலாவது ஒருவரை ஒருவர்ப் பிரிந்த இடத்து இரங்கல். அது தெட்டாறு சென்றவழி இரங்குதல் இன்மையானும் ஒருவழித் தணந்தவழி ஆற்றுதலின்றி வேட்கை மிகுதியால் இரங்குதலானும் வேறு ஒதப்பட்டது. (இதற்கு ஏறிய மடற்றிறமும் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறமும் முதலாயின பொருள். இது பெருந் திணைக்கு உரியது' என உரை எழுதிச் செல்கின்றார்.