பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

377 புலனன் குனர்ந்த புலமை யோரே' என்ற நூற்பாவின் முதல் அடியில் திணைமயக்கத்தைத் தொகுத்துக் கூறிப் பின் தொடர்ந்து வரும் அடியில் நிலம் மயங்காது என்று கூறுகின்றார் எனக் கொள்ளலாம். இனி, 'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும்' என்ற நூற்ப்ாவில் வாராவாயினும் என்றதனால் வரும் எனக் கருப்பொருள் மயக்கம் கூறுகின்றார். 'உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே" என்ற நூற்பாவில் உரிப்பொருள் மயங்காது என்கின்றார். எனின் எஞ்சி நிற்பது காலம் மட்டுமே. எனவே உரிப் பொருள்அல்லன என இவண் தொல்காப்பியர் குறிப்பது காலத்தை மட்டுமே. இவ்வாறு, கொண்டால் தொல் காப்பியனார் எந்த நிலையிலும் கூறியது கூறல் குற்றத்திற்கு ஆட்படவில்லை என வரையறுத்துக் கூறலாம். இருவகைப் பிரிவு 'இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும் உரிய தாகும் என்மனார் புலவர்' என்ற ஒரு நூற்பா அகத்திணையியலில் காணப்படுகின்றது. இவ்விருவகைப் பிரிவுகள் இன்னின்ன என்பதைத் தொல் காப்பியனார் குறிக்கவில்லை. இளம்பூரணர் தலைமகளைப் பிரித்தலும், தலைமகனை உடன்கொண்டு தமர்வரைப் பிரிதலும் என்ற இரண்டைக் குறிப்பிடுவர். நச்சினார்க் கினியர் காலிற் பிரிவு, கலத்திற் பிரிவு என்ற இரண்டைக் குறிப்பர். நாவலர் சோமசுந்தர பாரதியார் வேனிற் பிரிவு, பின்பணிப் பிரிவு என்ற இரண்டைக் கருதுவர். இருவகைப் பிரிவு என்ன என்பதைத் தொல்காப்பியனார்வழி அறிய இயலாத நிலைமையும் இந்நூற்பா அமைப்பையும் நோக்கு போது இந்நூற்பா இடம் பிறழ்ந்துள்ளதோ என்ற ஐயம் ஏற்படுகின்றது.