பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 முல்லை நிலமேயாகும். பிரிவாற்றாக் குறமகளிர் இரங்குவ தால் மலை நிலம் நெய்தல் ஆகாது. குறிஞ்சியேயாம்' என்று பாரதியும் இந்நூற்பா உரிப்பொருள் மயக்கமே கூறிற்று என்பர். முதல் இரண்டு நூற்பாக்களை இணைத்து நோக்கும் போது உரிப்பொருள் மயக்கம் என்ற கருத்து தொல்காப்பிய னாரின் கருத்துக்கு முரண்பட்ட ஒன்று என்பது தெளி வாகிறது. 'உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே என்ற நூற்பா உரிப்பொருள் மயங்காது என்பதைத் திட்டவட்டமாகக் குறிக்கின்றது. இவ்வாறு இருக்க நச்சர் உரையாசிரியர்கள் உரிப்பொருள் மயக்கம் கூறுவது 14ஆம் நூற்பா எனக் கூறுவது பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது. உரிப்பொருள் அல்லன என்பதற்குக் கருப்பொருள் முதற்பொருள் என்றுரைப்பர் இளம்பூரணர். நச்சர், குழந்தை, அருணாசலம் பிள்ளை ஆகியோர் கைக்கிளை பெருந்திணை என்றனர். கொண்டுதலைக் கழிதல், கலந்த பொழுது எனப் பொருள் கூறுவர் பாரதி. 14ஆம் நூற்பாவில் முதற்பொருள் மயக்கத்தையும், எந்நில மருங்கில் என்ற நூற்பாவில் கருப் பொருள் மயக்கத்தையும் கூறியவர் மீண்டும் கூறியது கூறலாக உரிப்பொருள் அல்லாத முதற்பொருளையும், கருப் பொருளையும் சுட்டுதல் வேண்டா என்று கருதிய பாரதி புதுப்பொருள் நாடினர். எனினும் அவர் கூறும் முடிவு பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. பாரதியின் கருத்துப்படி தொல்காப்பியனார் கூறியது கூறல் குற்றத்திற்கு ஆட்படவில்லை. அவர்தம் கருத்தைத் தெளிவாகவே கூறுகின்றார். தொல்காப்பியனார் தொகுத்துக் கூறிப்பின்னர் வகுத்துக் கூறும் உத்தியைக் கையாளும் இயல்பினர் என்பதற்கு அவர் நூலிலுள்ளே பல சான்றுகள் விரவிக் கிடக்கின்றன இவ்வாறே "திணை மயக்குறுதலும் கடிநிலை யிலவே நிலனொருங்கு ம்யங்குதல் இல்லென மொழிப