பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375 'குறிஞ்சி, பாலை, முல்லை. மருதம் நெய்த லைந்திணைக் கெய்திய பெயரே' என ஐந்திணைக்குரிய பெயர்களை நம்பியார் தொகுத்துக் கூறுதல் போன்று தொல்காப்பியனார் ஐந்திணைப் பெயர் களை யாண்டும் தொகுத்துக் கூறவில்லை. உய்த்துணரும் படியே அமைக்கின்றார். காலம் நிலம் பற்றிக் கூறியவர் மற்றொரு முதற்பொருளான காலத்தை ஏழு நூற்பாக்களில் கூறுகின்றார். காரும் மாலையும் முல்லைத்திணைக்கு உரியன. கூதிர்காலமும் யாமம். முன்பனியும் குறிஞ்சித்திணைக்கு உரியன. வைகறையும், விடியலும் மருதத்திணைக்குரிய பொழுதுகள். எற்படு பொழுது நெய்தல் திணைக்கு உரியது. நண்பகல் வேனில் என்பன நடுவுலைத் திணைக்கு - பாலைத்திணைக்கு உரியன. 'தினை மயக் குறுதலும் கடிநிலை யிலவே நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப புலனன் குணர்ந்த புலமை யோரே' 'உருப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே" 'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும்' என்ற தொல்காப்பிய நூற்பாக்கள் திணைமயக்கம் பற்றிப் பேசுகின்றன. இந்நூற்பாக்களுக்கு 'உரை வகுக்கும் உரை யாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உரைகூறிச் செல் கின்றனர். திணைமயக்கம் என்பதில் திணை என்பதற்கு ஒழுக்கம் எனப் பொருள் கொண்டு திணைமயக்குறுதலும் கடிநிலை யிலவே' என்ற நூற்பாவின் மூலம் உரிப்பொருள் மயக்கம் கூறப்பட்டது என்பர் நச்சர். இளம்பூரணர் இந்நூற்பா முதற் பொருள் மயக்கம் பற்றிப் புகல்கிறது எனப் புகல்வர். எவ்வொழுக்கம் எங்கு நிகழினும் நிலத்தியல்பு மாறாது. காடு புணர்ச்சி நிகழ்வதால் குறிஞ்சி ஆகாது.