பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

381 இவர்களுள் ஆயர் முதலான திணைமக்களெல்லாம் நினைதோறும் வாழ்ந்து வந்த பழந்தமிழ் மக்கள் என்பதும், பார்ப்பனர், மன்னர், வணிகர் வேளாளரெல்லாம் அப்பழந்தமிழ் மக்களிலிருந்து தோன்றிச் செயல்முறையால் வேறுபட்ட எல்லாத் திணையிடத்தும் வாழ்ந்து பிறரை விக்கொள்ளும் ஏவல் மரபின் ஏனோர் என்பதும் உய்த் துணரப்படுகின்றன. பிரிவுகள் அகத்திணை ஒழுக்கத்தையுடைய மக்கள் ஒதவும், பகையை வெல்லவும், துரது உரைக்கவும், தெய்வப் படிமத்தையுடைய திருக்கோயில்கட்குப் பிழை ஏற்படின் அதனைக் காக்கவும், பொருள் ஈட்டவும் பிரிந்து செல்வர் என்று குறிக்கின்றார் தொல்காப்பியனார். இவற்றுள் ஒதற்பிரிவும் துதிற் பிரிவும் உயர்ந்தோர்மாட்டு நிகழும், பகைவயிற் பிரிவு வேந்தனுக்கும் அவனுக்குற்றுழி யுதவும் ஏனோர் மாட்டும் நிகழும். காவற் பிரிவு வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியது. பொருள்வயிற் பிரிவு அரசர் ஒழிந்து ஏனோர்க்கு உரியது என்று குறிப்பிடுவர். இவ்வாறு இவர்கள் பிரியும்போது சில பிரிவுகளில் தலைமகளையும் உடன்கொண்டு செல்வர் என்றும், தலை மகளை உடன்கொண்டுசெல்லுமிடத்துக் கடல்வழிப்பிரிதல் என்றும் கூறுகின்றார். 'முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை' என்பது அந்நூற்பா. மடல் விலக்கு மடல் ஏறல் ஆண்களுக்கே உரிய நிகழ்ச்சி என்பதையும், பெண்கள் மடல் ஏறல் அவர்தம் பொற்புக்கு ஏற்புடைத்தன்று என்பதையும், 'எத்துணை மருங்கிலும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிமை இன்மை யானே' என்ற நூற்பாவில் தெளிவுபடுத்துகின்றார்.