பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385 என்றாலும் அகவொழுக்கமாகவே ஆசிரியர் இவற்றைப் போற்றுகின்றார். களவியல் களவு கற்பெனக் கைகோள் இரண்டு வகைப்படும். இதனைத் தொல்காப்பியனாரின் "மெய்பெறும் அவையே கைகோள் வகையே என்ற செய்யுளியல் நூற்பா விளக்கி நிற்கிறது. அகப்பொருள் விளக்க ஆசிரியரும், 'அளவி லின்பத் தைந்திணை மருங்கிற் களவுகற் பெனவிரு கைகோள் வழங்கும்' என இவ்விருவகைக் கைகோளைக் குறித்துச் சொல்கின்றார். இவ்விருவகைக் கைகோளில் களவு என்ற கைகோளின் விளக்கமாக அமைவது களவியல், அதாவது பெருமையும் உரனும் மிக்க தலைவனும்,அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவற்றால் சிறந்த தலைமகனும் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் காரணமாக, நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்த அறிவுடம்பட்டுக் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றிக் கரந்த உள்ளத்தினராய்த் தம்முள் தாமே கூடி இன்புற்று வாழும் வாழ்வாகிய களவு வாழ்க்கையை இக்களவியல் விரித்தோதுகின்றது. களவு - விளக்கம் களவு என்பது மறையோரிடத்து ஒதப்பட்ட மணம் எட்டனுள்ளும் துறையமை நல்யாழினையுடையராய துணைமையோர் நெறி என்பதை, 'இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டங் காணுங் காலை துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே' என்ற நூற்பாவில் நுவல்கின்றார் ஆசிரியர் தொல் காப்பியனார். எட்டு வகை மணங்களாகப் பிரமம் (கன்னியை