பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 நிகழ்தலின் அதனையும் கைக்கிளையாகக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. பெருந்தினை கைக்கிளையை விடப் பெருந்திணை ஒழுக்கத்தை மிகக் குறைவாகவே பேசுகின்றார். ஆசிரியர் பெருந்தினை இன்னது என்பதை, 'ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே' என்ற நூற்பாவில் தெரிவிக்கின்றார். இதில் இடம்பெறும் மடலேறல் ஆண் இனத்துக்கே உரியது என்பது முன்னர்க் கூறப்பட்டது. இவை மட்டுமல்லாமல் பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம், தெய்வம் என்ற நான்கும் இப்பெருந் திணைப் பாற்படும் என்பது, 'பின்னர் நான்கும் பெருந்திணைப் படுமே என்ற நூற்பாவினால் தெரிய வருகின்றது. இவற்றை இவ் வாறு கூறியதற்கு. 'இந்நான்கும் ஒருதலைக்காமம் பற்றி நிகழாமையாலும் ஒருவனோடு ஒருத்தியை எதிர்நிறுவி அவருடம்பாட்டோடு புணர்க்கும் கந்திருவம் ஆனமையானும் அவற்றின் வேறாகிய பெருந்திணையாம்' என்று காரணம் கூறுவர் நச்சினார்க்கினியர். இளம்பூரணர், பெருந்திணை நடுவனைந்திணையாகிய ஒத்த காமத் தின் மிக்கும் குறைந்தும் வருதலாலும், எண்வகை மணத்தினும் பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வமென்பன அத்திணைப் பாற்படுதல்ாலும் இந்நான்கு மணமும் மேன்மக்கள்மாட்டு நிகழ்தலாலும் இவை உலகிலுட் பெருவழக்கு எனப் பயின்று வருதலாலும் அது பெருந்திணை என்று கூறப்பட்டது என்பர். கைக்கிளையும், பெருந்திணையும், ஐந்தினை ஒழுக்கம் போலச் சிறந்த ஒழுக்கங்கள் அன்று