பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

383 கைக்கிளை கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். பெருமை யில்லாத தலைமக்கள் உறவு என்று கொள்ளப்படும் இக் கைக்கிளையைப் பற்றி ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணையியலிலும், களவியலிலும் பேசுகின்றார். இக்கைக்கிளை தலைமகன்மாட்டு நிகழ்வதாக மட்டுமே ஆசிரியர் குறிப்பிடுகின்றார். தலைமகன் காமம் மிக்கவிடத்தே காம்ஞ்சாலாத இளமையோள்பால் சென்று தன் காமக் குறிப்பை எடுத்துக் கூற, அவள் சொல்லாடா நிற்கவும் இவன் சொல்லி இன்புறுவான், இது தான் கைக்கிளை என்பதை, 'காமஞ் சாலா இளமையோள் வயின் ஏமஞ் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான் தன்னொடும் அவளொடும் தருக்கியே புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே' என்ற நூற்பா தெரிவிக்கின்றது. இனி 'முன்னைய நான்கும் முன்னதற்.கென்ப" என்ற நூற்பாவும் கைக்கிளைக்கு உரியதோர் மரபு உணர்த்துவதாகக் கொண்டு நான்கு என்பதற்கு ஏறா மடற்றிறம், இளமை தீராத்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகாத் திறம் மிக்க காமத்தின் மாறாகாத்திறம் என்பவற்றை உரைப்பார். களவியலில் இடம் பெறும் 'முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே' என்ற நூற்பாவில் கைக்கிளைக் குறிப்பினை வைக்கின்றார் ஆசிரியர். இதில் இடம்பெறும் மூன்று என்பதற்கு உரை யாசிரியர் எண்வகை மணத்தினுள்ளும் அகரம் முதல் மூன்றும் கைக்கிளைப்பாற்படும் என்று கூறுகின்றார். ஐந்திணை ஒழுக்கத்தில் நிகழும் காட்சி முதல் குறிப்பறிதல் ஈறாக நிகழும் அத்திணையும் ஒருவர்மாட்டு மட்டுமே