பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 குறிப்பினை வெளிப்படுத்த முனைவான். அவ்வாறு முனையும் போது அவன் சொல்லாடுதல் மரபின்மை ஆதலின் தன் காமத்தைக் கண்ணினால் குறிப்பாக உணர்த்துவான். தலை மகன் குறிப்பைத் தெளிந்து கொண்ட தலைவியும் தன் கண்ணினாலேயே குறிப்பினைத் தெரிவிப்பாள், காரணம் அந்த நிலையில் சொல்லாடுதல் தலைவிக்கு மரபன்று, மேலும் தன் குறிப்பினை வெளிப்படையாகத் தெரிவிக்கும் இயல்பு பெண்களுக்கு இயலாத ஒன்று ஆகும். 'நாட்டம் இரண்டு அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்' 'குறிப்பே குறித்தது கொள்ளு மாயின் ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்' என்ற நூற்பாக்கள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன. களவில் தலைமகன் களவில் ஈடுபட்ட தலைமகனுக்குரியவற்றை மிகச் சில நூற்பாக்களிலேயே விளக்குகின்றார். ஆனால் தலைமகள், தோழி இவர்களுக்குரியனவற்றைப் பலவாறாக விளக்கு கின்றார். தலைமகன் பெருமையும் உரனும் மிக்கவனாக இருத்தல் வேண்டும். தலைமகன் தன் களவொழுக்கத்தை நாள் பார்த்துத்தான் மேற்கொள்ள வேண்டும். ஆற்றின்று அருமை, மனன் அழிவு, அஞ்சுதல், இடையூறு முதலியன தலைவன் மாட்டு நிகழாது. களவினை வெளிப்படுத்துதல் அம்பலும் அலரும் ஆதலின் அதற்குக் காரணமானவன் தலைமகனே. களவில் தலைமகள் தலைமகள் அச்சம், மடம், நாணம் முதலிய மூன்றும் மிக்கவளாகத் துலங்குதல் வேண்டும். இவ்வாறு இவை தலைமகள் நானும், மடனும் மிக்கு இலங்குவதால் அவள் தன் வேட்கையினைக் குறிப்பினானும் இடத்தினானும் மட்டுமே புலப்படுத்துவாள். இனித் தலைமகள் தலைமகனைக் கூடும் வேட்கைக் குறிப்பினளாக இருந்தபோதிலும் அதற்