பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

389 குடம்பட்ட நெறியைக் கூறுதல் அருமையுடைத்தாதலின் அதற்கு உடம்படாதாள் போன்று கூறும் கூற்று மொழியை உடையவள் ஆவள். இவ்வாறு தன் வேட்கையைக் கிழவன் முன் சொல்லாதவிடத்தும் அவ்வேட்கை புதுக்கலத்துட் பெய்த நீர்போலப் புறம்பொசிந்து காட்டும் இயல்பினை உடையது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர் தலைவன் மீண்டும் தன்னை வந்து கூடும் இடத்தைக் கூறுதல் தலைமகனுக்கே உரியது. களவில் தோழி தோழி எனப்படுபவள் செவிலியின் மகள். அவள் சூழவும் உசாத்துணை ஆகவும் வல்லள் ஆதல் வேண்டும்: அவள் தலைவன் தலைவி இருவர்தம் களவினைக் குறையுற உணர்தல், முன்னுற உணர்தல், இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல் என்ற மூன்று வகையால் மதியுடம்படுவாள். தோழி மதியுடம்பட்டால்தான் பின்னர் கூட்டத்திற்குத் துணையாவாள். இனி கூட்டம் முயலும் காலத்து ஆராய்ந்து புணர்த்தலைச் செய்பவளும் தோழியே ஆவாள். களவு உணர்வகை இவ்வாறு பாங்கியின் உதவியாகக் கொண்ட தலை மகளின் களவினை அவள் தந்தையும் ஐயரும் குறிப்பினால் உணர்வர். தாய் செவிலியைப் போன்றே தலைவியின் களவறிந்து கவல்வாள். தந்தையையும் தமையரையும் போன்று வெகுளுதல் செய்யாள். அம்பல், அலர் ஆகிய இரண்டும் கூட களவினை வெளிப்படுத்தி நிற்கும். கற்பியல் = தலைமகன் தலைமகள் இருவர்தம் கற்பு வாழ்க்கையின் விளக்கமாக அமைவது கற்பியல், கற்பொழுக்கமாவது பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு முதலிய பண்புகளால் ஒத்த தலைமகனும் தலைமகளும் (தலைமகன் மிக்கவ னாயினும் குற்றமில்லை) கொடைக்குரி மரபினோர்