பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

391 பிரிவின் விளக்கமாகிறது. பிரிவு என்பது தலைமகள் தலைமகளைப் பிரிந்து செல்லுதலையும், புணர்வு என்பது பிரிந்து சென்ற தலைமகள் மீண்டு வந்து கூடுதலையும் உணர்த்துகிறது. களவு வகைகளைப் போன்றே கற்பு வகை களில் நிகழ்ச்சிகளையும் தொல்காப்பியனார் தனித்தனியே விளக்கவில்லை. இங்கும் கூற்று வகையிலேயே கூறிச் செல் கின்றார். நுழைவாயில் கற்பு வாழ்க்கையின் நுழைவாயிலாக அமையும் திருமணத்தை வதுவை நன்மணத்தைக் குறித்துக் கற்பியலின் முதற்பகுதியில் பேசுகின்றார் ஆசிரியர். 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்ற நூற்பா தொல்காப்பியனார் காலத்திற்கு முன்னர் தமிழர் கரணம் என்ற ஒன்று இன்றியே வாழ்ந்தனர். இவர் காலத்தில்தான் கரணம் என்ற ஒன்றுடன் இல்வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார், என்பதைப் புலப்படுத்தி நிற்கிறது. உரை யாசிரியர்களின் கூற்றுகளும் இதனை உணர்த்தி நிற்கின்றன. இக்கரணமும் களவு வெளிப்பட்டபின் வரைதல், களவு வெளிப்படா முன் வரைதல் என இருவகைப்படும். களவு வெளிப்படுமுன் தலைமகனும் தலைமகளும் உடன்போக்கு நிகழ்த்தும் காலத்தும் வரைந்து கொள்வர் என்பதை, 'கொடுப்போர் இன்றியுங் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான' என்ற தொல்காப்பியனாரின் மொழியால் அறியலாம். களவு வெளிப்பட்டபின் தலைமகன் தலைமகளை அவள் பெற்றோர் கொடுப்பக் கொள்வான். இவ்வாறு கொள்வது களவு வெளிப்பட்ட பின் வரைதலாகும். நம்பியகப் பொருள் ஆசிரியர் தன்மனை வரைதல், அவன்மனை வரைதல், உடன்போய் வரைதல் என்ற மூன்று நிலையைக் காட்டு கின்றார். தலைமகன் உடன்போய்த் தன்னுரரின்கண் வரை தலும், தன்மனைக்கண் வரைதலும் ஆகிய இரண்டும் -