பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- H. o 392 ஒழித்து அல்லாத எல்லா வரைவின்கண்ணும் தலைமகன் சான்றோரையும், அந்தணரையும் முன்னிட்டு அருங்கலம் கொடுத்து வரைந்து கொள்வான் என்றும் அகப்பொருள் கூறுகிறது. தலைமகன் அருங்கலம் கொடுத்து வரைந்து கொள்ளுதலைத் தொல்காப்பியனார் குறிக்கவில்லை. தலைமகன் தலைமகளை அவள் பெற்றோரும் உற்றோரும் மற்றோரும் கொடுப்பக் கொண்ட நிலையையே தொல் காப்பியம் தெரிவிக்கின்றது. தலைமகளின் பெற்றோரையோ, உற்றோரையோ தொல்காப்பியத்தின்வழி அறிய முடிய வில்லை. தலைமகன் தன் திருமணத்திற்குத் தன் பெற்றோரின் இசைவினைப் பெற்றானா இல்லையா? என்பதும் அறிதற் கில்லை. கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொண்டு தன் இல்லத்திற்கு ஏகினானா? அன்றித் தலைமகன் வீட்டிலேயே தன் இல் வாழ்க்கையைத் தொடங்கினானா? அன்றித் தனிமனை வாழ்க்கை மேற்கொண்டானா என்பது பற்றிய செய்தி களையும் தொல்காப்பியத்தின் வழி அறிய முடியவில்லை. மகட்கொடை மன்றலைத்தான் தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார். தலைமகன் வீட்டில் திருமணம் நடை பெற்றிருக்கக் கூடுமா என்பது ஐயத்திற்குரியதே! கற்பில் தலைவன் உணர்ப்பு வரை இறப்பினும், செய்குறி பிழைப்பினும் தலைமகன் புலத்தலுக்கும் கூடலுக்கும் உரியவன். தலைமகன் காமம் மிக்கவிடத்துக் தலைமகளிடத்துப் பணிவான மொழிகளைத் தோற்றுதற்கும் உரியவன். பின்வருமுறை ஆக்கிய பெரும்பொருள் வதுவையுடன் தொன்முறை மனைவியை எதிர்ப்படுகின்ற காலத்தும், புதல்வனை வாயிலாகக் கொண்டு புகுமிடத்தும் கலங்குதற்கு உரியன். தலைமகன் தலைமகள்முன் தன்னைப் புகழ்ந்து கூறுதல் வினை.வயிற் பிரியும் வழி உரித்து.