பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

393 எல்லாப் பிரிவின் கண்ணும் தலைமகன் தலைமகளை வற்புறுத்தியல்லது சேறுதல் இல்லை. இதுபோல் தலைமகனுக்குரிய மரபுகள் பலவற்றைக் கற்பியலில் ஆசிரியர் தொல்காப்பியனார் எடுத்துரைக்கின்றார். கற்பில் தலைவி தலைமகளின் மாண்புகள் இன்னின்ன என்பதை, 'கற்புங் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோன் மாண்புகள் என்ற நூற்பாவில் அறிவிக்கின்றார். தலைமகள் தலைமகன்மாட்டு அருண்முந்துறுத்த அன்பு பொதி கிளவியைப் பொருள்பட மொழிபவளாக இருத்தல் வேண்டும். தலைமகள் தலைமகனொடு பாசறைக்கண் செல்லாள். ஆனால் புறப்பெண்டிரைத் தலைமக்கள் பாசறைக்கண் புணர்வர். கிழவன் முன் கிழத்தி தன்னைப் புகழ்ந்து கொள்ளுதல் எக்காலத்தும் இல்லை என்பது போன்ற தலைமகளுக்குரிய மரபுகள் சிலவற்றையும் ஆசிரியர் இவ்வியலில் விரித் துரைக்கின்றார். வாயில்கள் அகத்திணைச் சமுதாயத்தில் அகவொழுக்கத்தை மேற்கொள்ளும் தலைவன், தலைவி என்னும் இருவருக்கும் உதவுபவராக இருப்பவரைத் தொல்காப்பியனார் வாயில்கள் என்பர். இவர் இன்னார் என்பதை, தோழி, தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாட்டி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப"