பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 என்ற நூற்பாவில் தொகுத்துக் கூறுகின்றார். இவ்வாயில் களில் அறிவர் முதலான மிக உயர்ந்தவரும், தோழி முதலான ஒத்தவரும், பாணன் முதலான தாழ்ந்தவரும் இருத்தலின் இவ்வாயில்களைப் பணியாளர் என்ற சொல்லால் வழங்குதல் கூடாது. தலைவியும் தலைவனும் நன்கு வாழ் வதற்கு வாயிலாக இருத்தலால் வாயில்கள் என்ற சொல் லால் வழங்குதலே தக்கதாகும். இவர்கள் தலைவன் தலைவி என்னும் இருவர்தம் மனமகிழ்ச்சிப் பொருளினையே நிகழ்த்துதற்குரியர். இவர்கள் தலைவனிடத்தே சென்று தலைவியைப் பற்றிப் பேசுவாராயின் தலைவியின் கற்பு, காமம், நல்லொழுக்கம், பொறுமை, நிறை, விருந்து, புறந்தருதல், சுற்றம் ஓம்பல் முதலான நற்பண்புகள் கூறுதல் வேண்டும். இவர்கள் வெளிப்படையாகப் பேசுதற்கே உரியர். கூற்று நிகழ்வகை கற்பில் கூற்று நிகழ்த்துதற்குரியார் இன்னின்னார் என்பதனை, 'பாணன் கூத்தன் விறலி பரத்தை யாணஞ் சான்ற அறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத் தொன்னெறி மரபின் கற்பிற் குரியர்' என்ற நூற்பா தெரிவிக்கின்றது. இதில் முன்னுறக் கிளந்த அறுவர் பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, கிழவன், கிழத்தி என்பவர் ஆவர். இவர்கள் அறுவரும் களவினிற் கூடுதற்குரியோர் ஆவர். இவர்கள் அனைவருக்கும் கூற்று நிகழ்கின்ற வகையினையும் தொல்காப்பியனார் கற்பியலில் விரிவாகப் பேசுகின்றார். சிறந்தது பயிற்றல் தலைமகனும் தலைமகளும் இல்லறம் நிகழ்த்தும் பாங்கினைக் கற்பியலில் உணர்த்திய ஆசிரியர் தொல் காப்பியனார் அதன் பிற்பகுதியில் காமஞ்சான்ற நிலையில் தலைமகனும் தலைமகளும் ஆற்ற வேண்டிய செயலினை,