பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 சிறந்த செயல்களைச் செய்தலே இறந்ததன் பயனாகக் கொள்ளத் தக்கது என்று கூறி நச்சினார்க்கினியர் மொழியை மறுத்து மொழிகின்றார். 'இவ்வாறு நேர்ப்பொருள் காணுவதை விடுத்து நச்சினார்க்கினியர் வடமொழி நூற்பொருளை நச்சி நூற்பாவின் சொற்கோப்பைச் சிதைத்து உளம் போனவாறு உரைகளைக் கூறித் தமிழர் வாழ்வியல் நெறியை மறைத்து வடவர் வாழ்வு முறையே தமிழர்க்கும் என நிலைநாட்டித் தம் வடமொழிப் புலமையை வையம் அறிந்து மகிழ வகை செய்து விட்டார்' என்பது அவர்தம் மறுப்புரை. ஆழ்ந்து நோக்கும் நச்சி னார்க்கினியர் உரை ஏற்புடைய ஒன்றாகத் தோன்றவில்லை. பொருளியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் பொருளியல் என்னும் பெயர்த்து. பொருளியல்பு உணர்த்தினமையாற் பெற்ற பெயர். என்னை பொருளியல்பு உணர்த்திய வாறு எனின், மேற்சொல்லப்பட்ட ஒத்துக்களினும், இனிச்சொல்லும் ஒத்துக்களினும் வரும் பொருளினது தன்மை யுணர்த்துதலிற் பொருளியல் உணர்த்திற்று' என இவ்வியலுக்கு விளக்கம் தரும் இளம்பூரணர் "இதனை ஒழிபியல் எனினும் இழுக்காது: அகப்பொருள் புறப்பொருள் என்பன இரண்டு பொருண்மையினும் எஞ்சி நின்றன கூறினமையின்" என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். 'இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையிற் பொருளியல் என்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஒத்துக்களும் பொருளிலக்கணமன்றே உணர்த்தின. இதற்கு இது பெயராயவாறு என்னையெனின்: சொல்லதி காரத்திற் கூறிய சொற்களை மரபியலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத் திரிபல் சொல்லென் பராதலின் அவை ஈண்டுத் தம்பொருளை