பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

397 வேறுபட்டிசைப்பினும் பொருளாமெனவும், இப் பொருளதிகாரத்து முன்னர்க் கூறிய பொருள்களிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைத்துச் சொல்லுணர்த்தும் பொருளும் தொடர்மொழி உணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலிற் பொருளியல் என்றார்' என உரை விளக்கம் செய்வர். இருவரும் இருவேறுபட்ட உரைகளைத் தந்து நிற்கின்றனர். பொருளியலை நோக்கும்பொழுது அது முன்னர் அகத்திணையியல், களவியல், கற்பியல் முதலிய இயல்களில் குறிப்பிடப்படாத அகப்பாடல் மரபுகளையும், அகப்பாடல் மாந்தர் மரபுகளையும், செய்யுள் மரபுகளையும் இன்னும் இதுபோன்ற பிறவற்றையும் உணர்த்துகின்றமை தெளிவா கிறது. அகப்பாடல் மரபு மக்கள் நுதலிய அகனைந்திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாத அகப்பாடலில் உண்ணுதல் தொழிலுக்குரியவல்லாத பொருளை உண்ணும் இயல் புடையனபோலக் கூறலும் மரபு என்பதை, 'உண்டற் குரிய அல்லாப் பொருள் உண்டன போலக் கூறலும் மரபே' என்ற நூற்பா எடுத்தோதுகின்றது, அகப்பாடல் மாந்தர் மரபு அகப்பாடல் மாந்தர்களான தலைமகன், தலைமகள், தோழி, தாய், செவிலி, வாயில்கள், பரத்தையர் இவர்க்குரிய நியதிகள் சிலவற்றையும் இப்பொருளியல் உணர்த்தி நிற்கிறது. தலைமகன், தலைமகள் இருவருக்கும் காமம் மிக்க நிலையில் களவு தோன்றுதல் இயற்கை என்பதனை, 'களவும் உரித்தால் அவ்விடத்தான என்பதனால் தெரிய வருகின்றது.