பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 களவுக் காலத்தில் தலைமகன் தலைமகளை தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்து சென்று காண்டற்கும் உரியவன் தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர்' என்பது நூற்பா. களவுக் காலத்தில் தலைமகளைப் புகழ்ந்துரைப்பது போன்றே வேட்கை மிக்கவிடத்து கற்புக் காலத்திலும் புகழ்தல் உண்டு. இதனை, -- 'நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியில் புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே என்றதனால் தெளியலாம். தலைமகன் புலவிக் காலத்தில் தலைமகளைப் பணிதற்கும் உரியவன். 'மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும் நினையுங் காலை புலவியுள் உரிய என்பன போன்ற தலைமகனுக்குரிய மரபுகளை இப் பொருளியல் உணர்த்தி நிற்கும். தலைமகன் பிரிந்து சென்ற காலத்தில் தலைமகள் தன் உடம்பும் உயிரும் வாடிய காலத்திலும் ஆற்றியிருத்தற்கு உரிய அன்றித் தலைமகள் சென்ற இடத்திற்குச் சேர்தற்கு உரிமையுடைவள் அல்லள். இதனை, 'உடம்பும் உயிரும் வாடியக் கண்னும் என்னுற் றனகொல் இவையெனில் அல்லதைக் கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை' என்றதனால் தெளியலாம். அவ்வாறு அவள் பிரிந்து சென்ற காலத்தில் நெஞ்சோடு உசாவுமிடத்து தலைமகனோடு சேர்தல் உரியதாகவும் உண்டு, 'ஒருசிறை நெஞ்சோ டுசாவுங் கால் உரிய தாகலும் உண்டென மொழிய' என்ற நூற்பா இதனை உணர்த்துகிறது.