பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

399 இவ்வாறே தோழி, செவிலி, நற்றாய், பரத்தை முதலி யோர்க்குரிய சில நியதிகளையும் உள்ளுறை, இறைச்சி பற்றி இவை இடம்பெற வேண்டிய நிலை பற்றியும் எடுத்துக் காட்டி இறுதியில் காட்டலாகாப் பொருள்கள் இன்னின்ன என்பதை எடுத்துக் கூறிப் பொருளியலை முற்றுப்பெற வைக்கின்றார். புறத்திணையியல் தொல்காப்பியனார் அகப்பொருளையும், புறப் பொருளையும் இயைபில்லாத இரண்டு திணைகளாகக் கூறாமல் புறத்திணைகளை அகத்திணைகளோடு இயைபு படுத்தியே கூறியுள்ளார். அதனால் அகத்திணை இலக்கணங் களை அரில்தப உணர்ந்தோர்க்குப் புறத்திணை இலக்கணம் கூறுபாடு தோன்றக் கூறப்படுகின்றது. 'அகத்திணை மருங்கில் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் என்று புறத்திணை இலக்கணத்தைத் தொல்காப்பியனார் கூறத் தொடங்குகின்றார். ஒரு பெரிய செயலினைப் பல பகுப்பாகப் பிரித்துக் கொண்டு அப்பகுப்பிற்கெல்லாம் தனித்தனிப் பெயர் வைத்து வழங்கும் வழக்கத்தை அகத்திணையியலிலும், புறத்திணை யியலிலும் காண்கின்றோம். அந்த முறையில் வெட்சித்திணை முதலிய திணைகளையெல்லாம் பலப்பல பகுப்பாகப் பிரித்துக் கொண்டு அவற்றிற்கெல்லாம் பெயர் வைத்துத் தொல்காப்பியனார் கூறுகின்றார். வெட்சி என்னும் புறத்திணை குறிஞ்சி என்னும் அகத்திணைக்குப்புலனாகும். அது வேந்தனாலே விடப்பட்ட முனையிடத்துள்ள வீரர் பகைவர் நாட்டினுள் புகுந்து அவர்தம் ஆக்களைக் கொண்டு வந்து ஒம்புதலாகும். வெட்சி தானே குறிஞ்சியது புறனே வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்