பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 என்பன தொல்காப்பியனாரின் கூற்றுக்கள். இது படையியங்கு அரவம் முதலான பதினான்கு துறைகளை உடையது. வெட்சித் திணையின் பின் நிகழ்வது வஞ்சி முதலிய போராதலால் அதற்கு உறுதி பயத்தற்காக மறவர்தம் குடியையெல்லாம் திரட்டி அவர்தம் ஆற்றலையெல்லாம் ஆராய்ந்து பாராட்டும் குடிநிலை என்னும் துறையும் கொற்றம் தரும் கொற்றவையை வழிபட்டு இனி நடக்கும் போரில் வேண்டும் கொற்றவை நிலை என்றும் துறையும் அடுத்துக் கூறப்படுகின்றன. பகை மன்னன் ஆநிரைகளைக் கவர்ந்து சென்றவுடன் அவற்றிற்குரிய அரசன் மீட்டுச் செல்லும் வெட்சியே இதனை வேலன் முதலாக உள்ள இருபத்தொரு துறையில் விளக்குகின்றார். வெட்சித்திணையில் வஞ்சித்திணையை விளக்கு கின்றார். இது முல்லைக்குப் புறனானது. இது மண்ணசை காரணமாக வந்த வேந்தனை மண்ணிற்குரிய மன்னன் அவன் அஞ்சுமாறு சென்று அடல் புரிதல் ஆம். இதனை, 'வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே' என்றதனால் உணரலாம். இது இயங்கு படை அரவம் முதலாக அழிபடை தட்டோர் தழிஞ்சி ஈறாக பதின்மூன்று துறைகளை உடையது. வஞ்சித்திணைக்கு அடுத்து விளக்கம் பெறுவது உழிஞைத்திணை. இது மருதத்திற்குப் புறம்பானது. இது பகை மன்னர்தம் அரணினை முற்றுகையிடலும், கோடலும் என்னும் இரு வகையாக நிகழ்வது. 'உழிஞை தானே மருதத்துப் புறனே முழுமுதல் அரணம் முன்னலும் கோடலும் அனைநெறி மரபிற்று ஆகும் என்ப"