பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

401 என்பது தொல்காப்பியம் காட்டும் நூற்பா. இந்த உழிஞைத்திணை கொள்ளார் தேஎங் குறித்த கொற்றம் முதலாக உடன்றோர் வருபகை பேனார் ஆரெயில் உளப்பட எட்டு வகைப்படும் என்பர். 'அறவே தானும் இருநூல் வகைத்தே' என்பது அந்நூற்பா. இந்த உழிஞைத்தினை குடை நாட் கோள் முதலாக தொகைநிலை ஈறாகப் பன்னிரண்டு துறைகளை உடையது. அடுத்ததாக விளக்கத்திற்கு அமைவது தும்பைத்தினை. இது நெய்தல் திணைக்குப் புறனானது. இது வலிமை காரணமாக வந்த வேந்தனை எதிர்ப்பட்டு அவன் மாற்றான் அவன்தன் வலிமையினை அடக்குவதன் காரணமாக நிகழ்வது. 'தும்பை தானே நெய்தலது புறனே மைந்துபொரு ளாக வந்த வேந்தனை சென்றுதலை அழிக்கும் சிறப்பிற் றென்ப என்ற நூற்பா இதனை எடுத்தோதுகின்றது. இந்தத் தும்பைத் திணையும் உழிஞைத் திணையைப் போன்றே பன்னிரண்டு துறைகளை உடையது. இத்திணைகளில் கூறப்பட்டுள்ள துறைகளின் வெட்சி யிற் கூறப்பட்டுள்ள ஊர்கொலையும், வஞ்சியிற் கூறப் பட்டுள்ள எரிபரந்தெடுத்தல் என்னும் துறையும் போரினால் பகைவர் நாட்டுப் பொதுமக்கட்கு ஏற்படும் துன்பத்தை எடுத்துக் காட்டும். நல்ல நாள் பார்த்துப் போர் தொடங் கும் முறையைக் குடைநாட்கோள் வாள்நாட்கோள் என்னும் துறைகளால் அறிந்து கொள்ளலாம். வாகைத்திணை பாலைத்திணைக்குப் புறனாக அமைவது, வாகைத்திணையினைத் தொல்காப்பியனார், 'வாகை தானே பாலையது புறனே தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப"