பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 என்ற நூற்பாவினால் விளக்குவர். வாகைத் திணைக்குரிய மக்களை இதனை அடுத்த நூற்பாவில் விளக்குகின்றார். இவர்கள் அறுவகைத் தொழில் செய்யும் பார்ப்பனர், ஐந்து தொழில் செய்யும் அரசர், ஆறு தொழில் செய்யும் வணிகர், வேளாளர், குற்றமில்லாத செயல்களை முக்காலமும் முறையுடன் செய்து வரும் அறிவர், எட்டுவகைத் தவத் தொழில் புரியும் தாபதர், பலவகையான தொழில் முறை களை அறிந்து போர் முதலியவற்றில் ஈடுபடும் பொருநர் என ஏழுவகைப்படுவர். அகத்தினைச் சமுதாயத்தில் அகவொழுக்கத்திற் குரியவராக ஆயர், வேட்டுவர் முதலான திணைமக்களைக் கூறிய தொல்காப்பியனார் அகத்தினையுடன் இயைபுடைய புறத்திணையைக் கூறுமிடத்து ஆயர் வேட்டுவர் முதலான வரைச் சிறிதும் குறிப்பிடாது புறத்தினைத் தொழிலுக்கு உரியவராகப் பார்ப்பனர், அரசர், வணிகர் முதலிய ஏழு பிரிவான மக்களையே கூறுதல் சிந்திக்க வேண்டிய ஒன்று. வாகை முதலிய தொழில் மேலாதலின் அறுவகை, ஐவகை, இருமூன்று வகை முதலியனவெல்லாம் தொழிலையே குறிப்பனவாம். வாகைத்திணைக்குரிய மக்களுள் அறிவரும் தாபதரும் உலகியல் நெறிக்கு அப்பாற்பட்ட ஒழுக்க முடையவராவர். பார்ப்பனரையும், அரசரையும் வேறுபடுத்திக் கூறிய தொல்காப்பியனார் வணிகரையும், வேளாளரையும் இரு மூன்று மரபின் ஏனோர் என்று ஒன்றுபடுத்தியே கூறு கின்றார். இவ்வாகைத் திணைகளைக் கூறும் மற்றொரு நூற்பாவில், 'பகட்டி றானும் ஆவி னாலும் துகள்தபு சிறப்பில் சான்றோர் பக்கமும்' என்று வேளாளரையும், வணிகரையும் சான்றோர் என்று ஒன்றுபடுத்திக் கூறுகிறார். இப்பகுதிக்கு உரை வகுத்த இளம்பூரணர் "பகட்டால் (எருது) புரைதீர்ந்தார் வேளாளர், ஆவால் குற்றம் தீர்ந்தார். வணிகர் என்பர். தொல் காப்பியனார் அடியோர் வினைவலர் என்று பணிமக்கள்