பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

タア தொல்காப்பியமும் சமுதாய இயலும் தோற்றுவாய் "தொல்காப்பியமும் சமுதாய இயலும்" என்று எழுதப்பெறும் இக்கட்டுரையில் முதற்கண் தொல் காப்பியனாரைப் பற்றிச் சிறிது சிந்திப்போம். தொல் காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் தமிழ் கூறு நல்லுலகத்தில் தமிழ் நாட்டு முடிமன்னர் மூவரும் நன்கு வாழ்ந்திருந்த காலத்தில் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்தே. அதங் கோட்டாசான் கேட்பத் தொல்காப்பியம் அரங்கேற்றப் பட்டதாகக் கூறுகிறது. மாங்குடி மருதனார் என்னும் புலவர் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் மேற் பாடிய மதுரைக்காஞ்சி என்று பாட்டில் அந்நெடுஞ்செழியனை, - "நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்" என்று நிலந்தரு திருவிற் பாண்டியன் வழித்தோன்றல் என்று குறிப்பிடுகின்றார். (உம்பல் என்னும் பலபொருள் ஒரு சொல் 'வழித்தோன்றல்' என்னும் பொருளை இங்கே தருகிறது). எனவே பாண்டியன் நெடுஞ்செழியன் தொல் காப்பியம் அரங்கேறிய நிலந்தரு திருவின் நெடியோன் வழியிலே வந்தவனாகக் கருதப்படுகிறான். மதுரைக் காஞ்சியின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டாகவோ அல்லது இரண்டாம் நூற்றாண்டி ன் தொடக்கமாகவோ கருதப்படுவதால் அக்காலத்தில் வாழ்ந்திருந்த நெடுஞ்செழியனுக்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பு நிலந்தரு திருவின் நெடியோன் வாழ்ந்திருத்தல் வேண்டும். எனவே அக்காலமே தொல்காப்பியனார் வாழ்ந்திருந்த காலமாகும்.