பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 எனவே தொல்காப்பியனார் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தவராவார். அதனால் அக்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த மக்கள் வாழ்க்கை இயல்புகளை அறிந்து கொள்வதற்குத் தொல்காப்பியம் பயன்படுகிறது. தொல்காப்பியனார் இலக்கியப் புலவரல்லர். அவர் ஒர் இலக்கணப் புலவராவார். அவர் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலை மட்டும் இயற்றினார். பன்னிரு படலத்தில் வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியனார் இயற்றியதாகப் பன்னிருபடலப் பாயிரம் கூறுகிறது. தொல்காப்பியத்தில் கூறப்படும் வெட்சித்திணையின் இலக்கணத்திற்கும் பன்னிரு படலத்தில் கூறப்படும் வெட்சித்திணையின் இலக்கணத் திற்கும் வேறுபாடிருத்தலாலும் பன்னிரு படலச் செய்திகள் பல தொல்காப்பியச் செய்திகளுடன் மாறுபட்டிருத்தலானும் தொல்காப்பியம் செய்த தொல்காப்பியனாரும் பன்னிரு படலத்தில் வெட்சிப் படலம் இயற்றிய தொல்காப்பிய னாரும் வேறு வேறாவர். தொல்காப்பியத்தைப் போலப் பன்னிரு படலம் பழமையுடையதன்றாதலின் அதனை இயற்றிய தொல்காப்பியரும் தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியனாருக்குப் பிற்பட்டவராவர். தொல்காப்பியனார் தம் காலத்திலே தமிழ் நாட்டில் வழங்கி வந்த உலக வழக்கம் செய்யுள் வழக்கம் என்னும் இரண்டினையும் முதற் கருவியாக வைத்துக் கொண்டும் அவற்றுடன் முந்நூலையும் ஆராய்ந்து கண்டும் தம் இலக்கண நூலைச் செய்ததாகத் தொல்காப்பியப் பாயிரம் கூறுதலின், தொல்காப்பியத்தில் தொல்காப்பியனார் காலத்து மக்கட் சமுதாய இயலையும் நாம் உணர்ந்து கொள்ளலாம். தொல் காப்பியத்தில் மக்கட் சமுதாய இயலை ஆராய்வதற்கு எழுத்தும் சொல்லும் ஒரளவே பயன்படுவனாகும்; ஆனால், பொருளதிகாரம் மட்டும் முற்றிலும் பயன் தரும். சமுதாயம் இனிச் சமுதாயம் என்ற சொல்லைப் பற்றிச் சிறிது சிந்திப்போம். மன்பதை என்ற சொல்லும் பைஞ்ஞ்லி என்ற சொல்லும் மக்கட் பரப்பை உணர்த்தும் என்று திவாகரம்