பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

407 முதலான மூன்று நிகண்டுகளும் கூறுகின்றன. திவாகர 誓 o 輯 ,סר H நிகண்டு திரண்டோர் பெயரை, | || சங்கமும் குழுவும் கூட்டமும் கணமும் தங்கிய தொகுதியும் சவையும் அவையும் இங்கிவை திரண்டோர் யாவர்க்கு முரிய என்று கூறுகிறது. ஆனால் சூடாமணி நிகண்டாவது திரண்டோர் பெயரைக் கூறும்பொழுது, "சவைசம வாயம் சங்கம் சமுதாயம் சமூகம்கோட்ட அவைகுழாம் குழுவே கூட்டம் அடர்திரள் கணங்களா றிவைதிரண் டோர்பேர்" என்று கூறுகிறது. இங்கே சமுதாயம் என்னும் சொல் வந்துள்ளது. இது திரண்டோர் பெயரைக் குறிக்கும் என்று சூடாமணி நிகண்டாசிரியர் கருதுகிறார். இச் சமுதாயம்' என்னும் சொல் இக்காலத்தே மன்பதை என்ற சொல்லினைப் போல மக்கட் பரப்பையெல்லாம் உணர்த்துகிறது. எனவே தொல்காப்பியரின் காலத்து வாழ்ந்திருந்த மக்கட் பரப்பின் இயலை ஒருவாறு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்க மாகும. தொல்காப்பியப் பொருளதிகாரமும் சமுதாய இயலும் சமுதாய இயலை ஆராய்வதற்குக் தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என்னும் இரண்டினை விடப் பொருளதிகாரம் மிகவும் பயன்தரும் என்று முன்னே குறிப்பிட்டேன். அப்பொருளதிகாரம் மக்கள் தம் ஒழுக்க நெறியை அகவொழுக்கம் புறவொழுக்கம் என்ற இரண்டாகப் பிரித்துக் கொண்டு அவற்றிற்கு முறையே அகத்திணை புறத்திணை என்று பெயர் வைத்து அவற்றை முறைப்படுத்திக் கூறுகிறது. அகவொழுக்கத்தை அகத்திணை இயல் என்று பொதுவியலாலும் களவியல் கற்பியல் என்ற சிறப்பியல்களாலும் பொருளியல் என்ற பொதுவியலாலும் தொல்காப்பியனார் கூறுகிறார். புறவொழுக்கத்தைப் புறத் திணையியல் என்ற ஓரியலாலேயே கூறுகிறார். இரண் on -