பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 டொழுக்கத்திற்கு வேண்டும் பொதுச் செய்திகளை மெய்ப் பாட்டியல் உவம இயல் செய்யுளியல் மரபியல் என்னும் நான்கியல்களாலேயே கூறுகிறார். இவற்றையெல்லாம் கருதின், தொல்காப்பியனார் அகவொழுக்கத்திற்கே முதன்மையும் சிறப்பும் தருகிறார் என்பது புலனாம். வெளிநாட்டுப் பழைய இலக்கியங்களில் புறவொழுக்கமாகிய வீரநிலையே முதன்மையும் சிறப்பும் வாய்ந்ததாக இருக்கத் தமிழ்நாட்டில் மட்டும் அகவொழுக்கமாகிய காமநிலையே முதன்மையும் சிறப்பும் வாய்ந்ததாக இருந்தது என்ற உண்மையைத் தொல்காப்பியனார் புலப்படுத்துகிறார். அவர் அகத்தினை இயலில் மக்களைக் குறிப்பிடும் பொழுது ஆயர் வேட்டுவர் என்று முல்லைத்திணை மக்களையும் குறிஞ்சித் திணை மக்களையும் முதற்கண் குறிப்பிட்டுவிட்டு அவர்களுள் தலைமக்களைக் கிழார்' என்ற சொல்லால் கூறிவிட்டு, மருதத்திணை மக்களையும் நெய்தல் திணை மக்களையும் இன்ன பெயரினர் என்று விதந்து கூறுமவர், ஏனோர்' என்ற சொல்லாலேயே குறிப்பிடுகின்றார். எனவே தமிழ் நாட்டு மக்களுள் ஆயர் வேட்டுவர் முதலான திணை மக்களும் அவர் தம்முள் தலைமக்களும் அகவொழுக்கத்திற்குச் சிறந்தவராகக் கருதப்படுகின்றனர். தொல்காப்பியனார் ஆயர் வேட்டுவர் ஏனோர் என்ற திணை மக்களுக்கும் அவர்தம்முட் சிறந்த 'கிழவர்' என்னும் தலைமக்கட்கும் வேறாக, அடியோர் வினைவலர் என்ற இரு பகுதியினரைக் குறிப்பிட்டு, அவர்களை உயர்ந்த அகத்திணை ஒழுக்கத்திற்கு உரியரல்லர், கைக்கிளை. பெருந்திணைக்கே அவர் உரியர் என்று கூறுகிறார். மேற்குறிப்பிட்ட இரு பகுதியினர்க்கு மேல், ஏவல் மரபின் ஏனோர் என்றவர்களைக் குறிப்பிட்டு இவரும் அகனைந்திணை முதலான அகவொழுக்கத்திற்குரியர் என்று கூறுகின்றார். ஏவல் மரபின் ஏனோர் என்ற சொற்றொடர்க்கு ஏவிக் கொள்ளும் மரபினையுடைய ஏனோர் என்று உரை