பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

409 கூறப்பட்டு அவர் பார்ப்பனர் அரசர் வணிகர் வேளாளர் என்பவராவார் என்பது குறிப்பால் உணரப்படுகிறது. எனவே அகத்தினை இயலில் கூறப்படும் மக்கட் சமுதாயத்தை ஆயர் வேட்டுவர் முதலான திணைமக்க ளென்றும், அவர்தம்முட் கிழவர் என்றும், மேற்கூறிய திணைமக்களுக்கு அடியோராயும் வினைவலராயும் இருக்கும் புணிமக்களென்றும்,ஏவல் மரபின் ஏனோராகிய பார்ப்பனர் அரசர் வணிகர் வேளாளரென்றும் நான்கு பிரிவாகப் பிரித்துக் கொள்ளலாம். தமிழ்கூறு நல்லுலகம் மாயோன் மேய காடுறை உலகமென்றும், சேயோன் மேய மைவரை உலகமென்றும், வேந்தன் மேய தீம்புனல் உலகமென்றும், வருணன் மேய பெருமணல் உலமென்றும் பிரிக்கப்பட்டு அவற்றிற்கு முறையே முல்லை,குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று பெயர் வழங்கப்பட்ட முறைமை யையும் அவற்றிற்குக் காலம் வகுக்கப்பட்ட முறைமையையும் முல்லை முதலான ஒவ்வொன்றிற்கும் உரிய தெய்வம் உணவு, விலங்கு, மரம், புள், பறை, யாழின் பகுதி பூ செய்தி என்ற கருப்பொருள் முறைமையையும் அவற்றிற்குரிய புணர்தல் முதலான உரிப்பொருள் முறைமையையும் நாம் கருதினால், அகப்பொருள் இலக்கியம் அந்தக் காலத்தில் எவ்வளவு கட்டுக்கோப்பான முறையில் இயங்கி வந்தது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளலாம். தொல்காப்பியனார் அகத்திணை இயலில் அக ஒழுக்கத் திற்குரிய மக்களை ஆயர், வேட்டுவர், ஏனோர், என்று முதற்கண் குறிப்பிட்டுவிட்டுப் பின்னர் அடியோரும் வினை வலரும் அகனைந்திணைக்குப் புற மான கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் உரியவர் என்றும், ஏவல் மரபின் ஏனோராகிய பார்ப்பனர் முதலான நால்வரும் இவ்வக வொழுக்கத்திற்குரியவர் என்றும் கூறுவதையும், அகத்திணை இயலில் பிரிவினைக் கூறும்பொழுது உயர்ந் தோர் (26), வேந்தன் (27-32), மன்னர் (30), பின்னோர் (30)