பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 வேந்தனின் ஒரீஇய ஏனோர் (32), திணைதோறும் வாழ்ந்து வந்த பழந்தமிழ் மக்கள் என்பதும் பார்ப்பனர் மன்னர் வணிகர் வேளாளரெல்லாம் அப்பழந்தமிழ் மக்களிலிருந்து தோன்றிச் செயல்முறையால் வேறுபட்டு எல்லாத் திணையிடத்தும் வாழ்ந்தும் பிறரை ஏவிக் கொள்ளும் ஏவல் மரபின் ஏனோர் என்பதும் உய்த்துணரப்படுகின்றன. அகத்திணை ஒழுக்கத்தினையுடைய மக்கள் ஒதவும், பகையை வெல்லவும், துரது உரைக்கவும் (27), தெய்வப் படிமத்தையுடைய திருக்கோயில்கட்குப் பிழை ஏற்படின் அதனைக் காக்கவும், பொருள் ஈட்டவும் (30) பிரிந்து செல்வர் என்றும், அவ்வாறு பிரியுமிடத்துச் சில பிரிவு களில் தலைமகளையும் உடன்கொண்டு செல்வர் என்றும், தலைமகளை உடன்கொண்டு செல்லுமிடத்து கடல்வழிப் பிரிதல் இல்லை என்றும் (37) தொல்காப்பியனார் கூறுகிறார். களவில் ஒழுகும் தலைவன் தலைவியிடத்தே தமர் திருமணத்திற்கு ஒருப்படாத காலத்திலே தலைவன் தலைவியைத் தமர்க்குத் தெரியாமல் உடன்கொண்டு செல்வான். இதனைக் தொல்காப்பியனார் கொண்டுதலைக் கழிதலென்று கூறி, பாலைத்திணை என்பர். கொண்டுதலைக் கழிதல் நிகழ்ந்த இடத்து நற்றாய் முதலியோர் தலைவி திரும்பி வருதலைக் குறித்தும் அவன் ஏதமில்லாமல் இருத்தலைக் குறித்தும் நற்றாய் முதலியோர் நிமித்தம் பார்த்தலும் நற்சொல் கேட்டலும் தெய்வத்தை வழிபடுதலும் முதலான செயல்களைச் செய்வர். தலைவன் தலைவியர் முதலியோர் அகவொழுக்கம் பற்றிய கருத்தை மறைத்துக் கூறல் வேண்டிய உள்ளுறை உவமையாலும் மறையாது கூறல் வேண்டிய இடத்தே வெளிப்படை உவமையாலும் கூறுவர் என்பர். இத்தகைய செய்திகளைத் தொல்காப்பியனார் அகத்திணை இயலில் கூறுகின்றார். அகத்தினைச் சமுதாயம் இனித் தொல்காப்பியனார் அகத்திணைச் சமுதா யத்தைப் பற்றிக் கூறும் சிறப்புச் செய்திகளைக் காண்போம்.