பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

411 அவர் அகத்திணையியல் தொடக்கத்தே அக ஒழுக்கத்தைக் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என்று மூன்று வகையாகவும் ஏழு திணையாகவும் பாகுபாடு செய்து கூறுகிறார். ൾ அவர் தொடக்க நிலைக் காமத்தையும், சிறிய காமத்தையும் ஒருபாற்காமத்தையும் காமம் துய்த்தலுக்கு ஏலாத இளையோர் பற்றிய காமத்தையும் கைக்கிளை என்றே கூறுகிறார். மிக்க காமத்தையும், காமம் நுகர்தலுக்கு ஏலாத முதியோர் காமத்தையும் பலவகையான பொருந்தாக் காமத்தையும் பெருந்திணை என்றே கூறுகிறார். இந்த இருவகைக் காமத்தைப் பற்றித் தொல்காப்பியனார் விரிவாகப் பேசவில்லை. காமம் நுகர்தலுக்கு ஏற்ற பருவமுடைய தலைவன் தலைவி என்னும் இருபாலரிடத்தே தோன்றும் அளவொத்த காமத்தை அவர் ஐந்திணைக் காமம் என்று கூறுகிறார். இக்காமமே தொல்காப்பியனாரால் மிகவும் செப்ப முடையதாக விரிவாகப் பேசப்படுகிறது. இக்காமத்தை அவர் மக்கள் நுதலிய அகனைந்திணை என்று, இன்பமும் பொருளும் அறமென்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்றும், சிறப்பித்துக் கூறுகிறார். இவ்வைந்திணைக் காமத்தின் பகுப்பாகிய களவு கற்பு என்னும் இரண்டும் தலைவன், தலைவி என்னும் இருவருடைய அன்பின் பெருக்கத்தாலே அமைவதாதலின் இறையனார் அகப்பொருள் ஆசிரியர், களவு கற்பெனக் கண்ணிய ஈண்டையோர் உளநிகழ் அன்பின் உணர்ச்சி மேன என்று கூறுவர். ஐந்திணைக் காமப்பகுதியைத் தொட்ட இடமெல்லாம் அன்பே சுரக்கும் என்பர் அறிஞர். தலைவன் தலைவி என்னும் இருவரும் அன்பினாற் புணர்தலைக் குறிஞ்சி என்றும், வினை நிமித்தமாகத் தலைவியினின்றும் தலைவன் பிரிதலைப் பாலை என்றும், 27