பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 பிரிந்த பொழுது தலைவி ஆற்றியிருத்தலை முல்லை என்றும், அவன் ஆற்ற இராமல் இரங்குதலை நெய்தல் என்றும், தலைவனிடத்தே தலைவி ஊடுதலை மருதம் என்றும் ஐந்து பிரிவாகப் பிரிக்கப்படுதலின் இக்காமம் ஐந்திணை என்ற பெயரைப் பெற்றது. கைக்கிளையையும் பெருந்திணையையும் இவ்வாறு பிரித்தோத முடியாதாதலின் ஐந்திணை என்னும் பெயர் அன்புடைக் காமத்திற்கே ஏற்ற பெயராயிற்று. தொல்காப்பியர் ஐந்திணைக் காமத்திற்குரிய ஆண் மகனையும் பெண்மகனையும் கிழவன், கிழவி, தலைவன், தலைவி என்ற பெயராலேயே கூறுகிறார். அதனால் அவ்விருவரும் உரிமையும் தலைமையும் உடையவராதல் புலப்படும். இவ்விருவரும் முன்னே களவினாற் கூடி யொழுகிப் பின்னர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை, நடத்தும் கற்பொழுக்கத்தை மேற்கொள்வர். + o அகனைந்திணையிற் களவு உரிமையுடைய தலைவனும் தலைவியும் முதற்கண் தனியிடத்தே நல்வினை கூட்ட எதிர்ப்பட்டுக் கண்னும் கருத்தும் இயைந்து உள்ளம் ஒன்றாவர். அப்பொழுது காமம் மீதுாரின் மெய்யுற்றும் புணர்வர். தொல்காப்பியனார் இதனைக் காமப்புணர்ச்சி என்பர். பின்னர் அவ்விடத்தே இருவரும் கூடுவர். இதனை இடந்தலைப்பாடு என்பர் அதன்பின் தலைவன் தன் பாங்கனால் தலைவி பொழிலகத்தே விளையாடும் இடமறிந்து அங்கே புக்குத் தலைவியைக் கூடுவன். இதனைப் பாங்கொடு தழாஅல் என்பர். பின்னர்த் தலைவன் தலைவியின் உயிர்த்தோழியை அறிந்து, அவன் உதவியால் தலைவியைக் கூடுவன். இதனைத் தோழியிற் புணர்வு என்பர். இவையெல்லாம் களவியலாகும். தொல்காப்பியனார் இதனை "காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும் பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வுமென்று ஆங்கரால் வகையினும் அடைந்த சார்பொடு மறையென மொழிதல் மறையோர் ஆறே"